எதிர்பார்த்தபடியே சிஆர் சரஸ்வதிக்கு பதவி.. பழனியப்பன் து.பொ.செ. ஆனார்.. வெற்றிவேல் பொருளாளர்!

அமமுகவின் புதிய நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டார் டிடிவி தினகரன்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சிஆர் சரஸ்வதிக்கு பதவி.. பழனியப்பன் து.பொ.செ. ஆனார்!

    சென்னை: எதிர்பார்த்தபடியே அமமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். அதில் 2 முக்கிய பொறுப்புகள் கவனிக்கத்தக்கதாக இருக்கின்றன.

    சில நாட்களாகவே அமமுகவில் ஏகப்பட்ட குளறுபடிகள், குழப்பங்கள் நிலவி வந்தன. இதையடுத்து ஒவ்வொரு முக்கிய புள்ளிகளும் வேறு கட்சிகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.

    இந்த நிர்வாகிகள் விலகலை அடுத்து, சிறையில் சென்று சசிகலாவை சந்தித்து பேசினார் டிடிவி தினகரன். அப்போது புதிய நிர்வாகிகள் பட்டியலை சசிகலாவிடம் காண்பித்து ஒப்புதல் வாங்கியதாக சொல்லப்பட்டது.

    பட்டியல் வெளியீடு

    பட்டியல் வெளியீடு


    மேலும் சசிகலாவின் பரிந்துரை பேரிலும் சில பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வந்தன.
    தற்போது அந்த நிர்வாகிகளின் பெயர் பட்டியலைதான் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார். இதில் முக்கியமாக 2 பேரின் பெயர்கள் பேசப்படுவதாக உள்ளது.

    முக்கிய பொறுப்பு

    முக்கிய பொறுப்பு

    ஒன்று, முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது. இந்த பதவியைதான் டிடிவி தினகரன் வகித்து வந்தார். தான் வகித்து வந்த பதவியை, இப்போது பழனியப்பனுக்கு அளிக்க காரணம் உள்ளது. பழனியப்பனும், அமமுகவில் இருந்து விலகி வேறு கட்சிக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் கசிந்தன.

    ஆடியோ

    ஆடியோ

    இப்போதைக்கு தினகரனின் வலதுகரமாக இருக்கும் பழனியப்பனை திமுக வளைத்துவிட்டதாகவும், ஸ்டாலினின் மருமகன் சபரீசனே பழனியப்பனிடம் பேரம் பேசியதாகவும் ஒரு ஆடியோ இணையத்தில் வலம் வந்தது. இதற்கு உடனடியாக பழனியப்பன் மறுப்பு தெரிவித்தாலும், நாளை எதற்காகவும் மனசு மாறிவிடக்கூடாது என்பதால்தான் அவரை சரிகட்ட இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

    சிஆர் சரஸ்வதி

    சிஆர் சரஸ்வதி

    அடுத்ததாக, அதிகம் எதிர்பார்த்த சிஆர் சரஸ்வதிக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது. அம்மா இட்லி சாப்பிட்டாங்க என்ற ஸ்டேட்மெண்ட் முதல் இப்போதுவரை தினகரனுக்கு ஆதரவாகவும், விசுவாசமாகவும் இருப்பவர் சிஆர் சரஸ்வதி. அதனால்தான் தங்க தமிழ்செல்வன் வகித்து வந்த கொள்கை பரப்புச்செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது.

    வெற்றிவேல்

    வெற்றிவேல்

    மேலும், துணை செயலாளர் பதவி தஞ்சை ரெங்கசாமிக்கும், பொருளாளர் பதவி முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேலுவுக்கும், அமமுக தலைமை நிலைய செயலாளர் பதவி திருச்சி ஆர்.மனோகரனுக்கும் தரப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+