விஜய் 100 கிமீ புயல்.. விஜயகாந்தை விட அதிக பாதிப்பு.. டிடிவி தினகரன் திடீர் டிவிஸ்ட்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. டிடிவி தினகரன் திடீரென மீண்டும் விஜயை பாராட்டி பேச தொடங்கியுள்ளார். விஜய் 100 கிமீ புயல்.. 2006 தேர்தலில் விஜயகாந்த் ஏற்படுத்திய பாதிப்பை விட, இந்தமுறை விஜய் அதிக பாதிப்பை ஏற்படுத்துவார் என்று அவர் கூறியுள்ளார் [TTV Dinakaran on Vijay].
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில், "விஜயகாந்தை விட விஜய் பெரும் பாதிப்பை உண்டாக்குவார். விஜயால் வருகிற 2026 தேர்தலில் பெரிய பாதிப்பு ஏற்படும். விஜயகாந்த் 60 கிமீ புயல். விஜய் 100 கிமீ புயல்.

விஜயால் திமுகவுக்கு அதிக பாதிப்பு
இதன் காரணமாக 2006 தேர்தலை விட திமுக அதிக பாதிப்புக்குள்ளாகும், விஜய் வருகையால் திமுகதான் அதிகம் பாதிக்கும். கடந்த 2006 தேர்தலில் விஜயகாந்தால் தான் மைனாரிட்டி அரசு உருவானது. அந்தத் தேர்தலில் திமுக, அதிமுக இருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. 2026 தேர்தலில் விஜயால் அதைவிட அதிக பாதிப்பு ஏற்படும்.
விஜய் பாதிப்பை ஏற்படுத்துவார்
விஜயகாந்த் அந்த தேர்தலில் சதவீதம் வாக்கு பெற்றதுடன் ஒரு தொகுதியில் வெற்றியும் பெற்றார். விஜய் பாதிப்பை ஏற்படுத்துவார் என்பதற்காகவே அவரின் கூட்டணியில் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நான் எதார்த்தத்தை சொல்கிறேன். அதற்காக அவருடன் இணைவேன் என்று எதிர்பார்க்க கூடாது. எனக்கு அவரைப் பார்த்து பொறாமை இல்லை.
நான் நேரடியாக பேசுவேன்
திமுக வை போல அவரைப் பார்த்து பயப்படவில்லை. ஸ்டாலினும், உதயநிதியும் நேரடியாக அவரைப்பற்றி பேச பயப்படுகிறார்கள். அவர்களை போல மறைமுகமாக பேசாமல் நான் நேரடியாக பேசுவேன். அன்றைக்கு அதிமுக ஊழல் கட்சி என்று விஜய் கூறியபோது, அவரை முதலில் வீட்டை விட்டு வெளியே வரச் சொல்லுங்கள் என்று சொன்னவனும் நான் தான்" என்றார்.
-
வேற லெவலில் விஜய் செய்த சம்பவம்! ஒரே நேரத்தில் 300 பேருக்கு ப்ரோமோஷன்! வரலாற்றில் முதன்முறையாமே! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
காலம் எவ்ளோ வேகமாக சுத்துது! அன்று கடம்பூர் ராஜூவுக்காக விஜய் காத்திருந்தார்! இன்று அப்படியே உல்டா! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
எனக்கு Clean அரசுதான் வேணும்! காதுக்கு ஏதாவது வந்தது தொலைச்சிடுவேன்! அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங் -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள் -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா?












Click it and Unblock the Notifications