என்னாது அதிமுகவில் நானா.. மதுரை ஆதீனம் கூறியதில் உண்மை இல்லை- டிடிவி தினகரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் நான் இணைய போவதாக மதுரை ஆதீனம் கூறியதில் எந்த உண்மையும் இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

தினகரன் அதிமுகவில் இணையும் பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர். அது போல் தினகரனும் நான் ஏன் அங்கு இணைய போகிறேன். அது துரோகிகளின் கூட்டம் என்று விமர்சனம் செய்து வருகிறார்.

TTV Dinakaran refuses that he would join in ADMK

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவர் அதிமுகவில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மதுரை ஆதீனம் கூறுகையில் தினகரன் நிச்சயம் அதிமுகவில் இணைவார்.

அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார் மதுரை ஆதீனம். இதை தினகரன் மறுத்துள்ளார். செயதியாளர்களிடம் அவர் கூறுகையில் அதிமுகவில் நான் இணைய போவதாக மதுரை ஆதீனம் கூறுவது ஆதாரமற்றது.

அதிமுகவில் நான் இணைய எந்த சமரச பேச்சும் நடத்தவில்லை. மதுரை ஆதீனம் கூறிய கருத்தில் உண்மை இல்லை. அதிமுகவில் இணைவதற்கு எனக்கு அவசியமும் இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+