தாடியுடன் தினகரன்.. ஏன் இப்படி.. என்னாச்சு.. நிறைய சோகமோ?
Recommended Video

சென்னை: இன்னைக்கு எல்லாருமே கவனித்த ஹாட் நியூஸ் என்ன தெரியுமா? டிடிவி தினகரனின் தாடி சமாச்சாரம்தான்.
வாய் நிறைய புன்னகை என்றே இருக்கும் தினகரன் இப்போதெல்லாம் கொஞ்சம் சைலன்டாக இருக்கிறார். அதிலும் எப்பவுமே மழ மழ முகம் என பளிச்சென காட்சி தெரியும் தினகரன் தாடியுடன் காட்சி தருகிறார்.
இன்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. தமிழகத்தின் எல்லா கட்சிகளும் இதில் பங்கேற்றன. அதில், சுயேட்சை உறுப்பினரான டிடிவி தினகரனும் பங்கேற்றார். ஆளுநர் உரை சபையில் ஒரு பக்கம் நிகழ்ந்து கொண்டிருந்தாலும், "தினகரனின் தாடி"யை எல்லாரும் கவனிக்க தவறவில்லை.

டல் அடிக்கிறது
எப்பவுமே டானிக் பேச்சுடன், ஃப்ரஷ்ஷாக காணப்படும் தினகரனிடம் இப்போது அதெல்லாம் மிஸ்ஸிங்!! குறிப்பாக, செந்தில் பாலாஜி அணி தாவலுக்கு பிறகு தினகரனின் பேச்சும் சரி, பேட்டியும் சரி கொஞ்சம் டல் அடிக்க ஆரம்பித்து விட்டது.

முகத்தில் தாடி
வருத்தம் தோய்ந்த முகத்துடன் வலம் வருவது ஏனோ தெரியவில்லை. பழைய உற்சாகமும் முகத்தில் தென்படவில்லை. தாடியும் முகத்தில் முளைத்து வருவது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

கோபப்பட்டவர்
எப்படா இந்த இடைத்தேர்தல்கள் நடக்கும் என்று காத்து கிடந்த முதல் நபர் டிடிவி தினகரன்தான். இடைத்தேர்தல் இப்போதைக்கு நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் அன்று மழையை காரணம் காட்டி சொன்னபோது, கோபப்பட்ட முதல் நபரும் தினகரன்தான். இது சம்பந்தமாக கோர்டுக்கு போகிறேன் என்றுகூட சொன்னார்.

தாடி ரகசியம்?
ஆனால் இப்போது தேர்தல் தேதி அறிவித்தும் தினகரனிடம் அந்த உற்சாகம் இல்லை. திருவாரூர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது குறித்த சந்தேகம் எழுந்துவிட்டதா? அல்லது செந்தில் பாலாஜிக்கு பிறகு வேறு சிலரும் அணி மாற போவதாக சொல்லி கொண்டிருந்தார்கள். முக்கியமாக தங்க.தமிழ்செல்வன்!! இப்போது அணி தாவல் விவகாரம் ஏதேனும் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பு உள்ளதா? என தெரியவில்லை.

மிஸ்டர் கூல்
அதனால் டிடிவி தினகரனின் தாடியின் ரகசியம் என்னவாக இருக்கும் என்பதை உறுதியாக கணிக்க முடியவில்லை. இதற்கான விளக்கத்தை "மிஸ்டர் கூல்"தான் முன்வந்து விளக்க வேண்டும்!
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications