அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்
சென்னை: ஒரு காலத்தில் தமிழக அரசியலை உலுக்கிய தினகரன், பாஜகவின் பேச்சை நம்பி இன்று தன் அரசியல் அடையாளத்தையே இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவின் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியதும், வென்ற ஒரேயொரு எம்.எல்.ஏ த.வெ.க-விற்குத் தாவியதும் அமமுகவை மொத்தமாக நிலைகுலையச் செய்துள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகளே புலம்ப ஆரம்பித்துள்ளார்களாம்.. என்ன நடந்தது?
தமிழக அரசியல் களம் எப்போதுமே எதிர்பாராத திருப்பங்களுக்கும், அதிரடி ட்விஸ்டுகளுக்கும் பஞ்சமில்லாத ஒரு களம். அதில் அமமுகதான் இப்போதைய ஹாட் டாப்பிக்காகும்.. அதிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் அரசியல் எதிர்காலம் மற்றும் அவரைச் சுற்றி நகரும் பாஜகவின் வியூகங்கள் தான் பலராலும் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.

தினகரன் சொன்ன வார்த்தைகள்
"பாஜகவுடன் கூட்டணி வைப்பது அரசியல் தற்கொலைக்கு சமம்" என்று ஒரு காலத்தில் தினகரன் சொன்ன வார்த்தைகள், இன்று அவரது சொந்தக் கட்சியினராலேயே அவருக்கு நினைவூட்டப்படும் அளவுக்கு அமமுகவில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறதாம்.
ஆம், டெல்லி தலைமை தங்களை மொத்தமாகக் கை கழுவி விட்டதாக அமமுக நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ள ஆதங்கம், தமிழக அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. இதன் பின்னணியில் இருக்கும் அரசியல்தான் இங்கு நாம் கவனிக்கப்பட வேண்டியவை.
அமமுக டிடிவி தினகரன்
கடந்த சட்டமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே அமமுகவிற்கான முட்டுக்கட்டைகள் தொடங்கிவிட்டன என்று சொல்லலாம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக நீடிக்க வேண்டுமானால், டி.டி.வி.தினகரன் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்கிற மிகக் கடுமையான நிபந்தனையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விதித்ததாகக் கூறப்படுகிறது.
கூட்டணியின் நலன் கருதியும், டெல்லி தலைமையின் சமரசப் பேச்சை நம்பியும் தினகரனும் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்கினார். ஆனால், இந்த விட்டுக்கொடுத்தல் அமமுகவுக்கே பெரும் பின்னடைவாகவே முடிந்து விட்டது போலும்.
ஒதுக்கப்பட்ட 11 தொகுதிகளில் மன்னார்குடியில் மட்டுமே காமராஜ் மூலமாக அமமுகவுக்கு ஒரு வெற்றி கிடைத்தது. ஆனால், அந்த ஒரேயொரு ஆறுதலும் நீடிக்கவில்லை.
வெற்றி பெற்ற காமராஜ்
வெற்றி பெற்ற காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் தாவியதால் ஒட்டுமொத்த அமமுகவும் நிலைகுலைந்து போனது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.க பேச்சைக் கேட்டுப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய தினகரன், இந்த முறையும் பாஜகவின் வியூகத்தை நம்பியே களம் காணாமல் போனதாகவும், அதன் விளைவோ பூஜ்ஜியமாக நிற்கிறது என்றும் குமுறுகிறார்கள் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர்கள்.
இந்த சூழலில் தான், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க குதிரை பேரம் நடப்பதாக முதன்முதலில் தினகரன் பகிரங்கமாகக் குரல் எழுப்பினார். இதற்கான ஆவணங்களைத் திரட்டி ஆளுநரிடமும் சமர்ப்பித்து, போலீசிலும் புகார் அளித்தார்.
இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று சி.பி.ஐ இயக்குநரைச் சந்தித்துப் புகார் அளிக்க தினகரன் திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது. ஆனால், இதற்கு பாஜக தரப்பிலிருந்து எந்தவொரு ஒத்துழைப்போ அல்லது அரசியல் ஆதரவோ கிடைக்கவில்லை என்பது தான் அமமுக நிர்வாகிகளை உச்சக்கட்ட கோபத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.
பாஜக கைவிட்டதா
மத்திய அரசும், ஆளுநரும் இந்த புகார்கள் மீது மெத்தனம் காட்டுவது தினகரனை பா.ஜ.க கைவிட்டுவிட்டதையே காட்டுவதாக அவர்கள் கருதுகிறார்கள்.
இப்போது அரசியல் ரீதியாக அனைத்துக் கதவுகளும் அடைக்கப்பட்ட ஒரு இக்கட்டான நிலைக்கு அ.ம.மு.க தள்ளப்பட்டுள்ளது. டெல்லியின் ஆதரவும் இல்லை, தமிழகத்தில் போதிய பலமும் இல்லை என்ற அதிருப்தியில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொத்து கொத்தாக மாற்று முகாம்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனராம்.
ஒரு காலத்தில் அதிமுக மிரட்டிய டி.டி.வி.தினகரனின் அரசியல் பயணம், தற்போது பாஜகவின் நிழலில் தஞ்சம் புகுந்து தன்னுடையே அடையாளத்தையே இழக்கும் நிலைக்கு வந்துவிட்டதோ என்ற கேள்வியும், கவலையும் நடுநிலையான அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த இக்கட்டான சரிவிலிருந்து தினகரன் மீண்டு வருவாரா அல்லது அமமுகவின் அத்தியாயம் இத்துடன் சுருங்குமா என தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
பாஜக லேபிளை உடைத்த அண்ணாமலை.. ஆட்டத்தையும் கலைத்த "சாமானியன்" அரசியல்.. இது பிளான் B-யா? -
4 அதிமுக விக்கெட் காலி.. இபிஎஸ்ஸுக்கு தலைவலி.. தவெகவில் இணைந்த மாஜி அமைச்சர்கள்.. விஜய் தந்த செக்மேட் -
ஸ்கீமுக்கு 10 செகண்டா? தலைமை செயலகத்தில் 75 நிமிட சர்ப்ரைஸ்! 436 திட்டங்களை விஜய் நகர்த்தியது எப்படி? -
சிங்கப்பெண் திட்டத்தை.. தொடங்கி வைக்க நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டுமா? சீறும் டிடிவி தினகரன் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications