அமமுகவை விரும்பி ஆரம்பிக்கவில்லை.. கட்சியை தொடங்கியது ஏன்?.. டிடிவி சொன்ன காரணத்தை பாருங்க!
சென்னை: அமமுகவை விரும்பி ஆரம்பிக்கவில்லை, அதிமுகவை எதிர்க்கவே கட்சி தொடங்கினேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் மதுரை மாவட்டம் மேலூரில் அமமுக என்ற புதிய அரசியல் அமைப்பை தொடங்கினர். கட்சி தொடங்கப்பட்ட போது அமமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவும் துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் பொறுப்பு வகிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது.

5 ஆம் ஆண்டு தொடக்க விழா
ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு அமமுகவின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் 4 ஆண்டுகள் முடிவு பெற்றதையடுத்து 5 ஆம் ஆண்டு தொடக்க விழா நேற்று ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

டிடிவி தினகரன்
கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இனிப்பு வழங்கினார். பின்னர் கட்சி அலுவலகத்தில் உள்ள பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்.

உள்ளாட்சி தேர்தல்
பின்னர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கும் வெற்றி தோல்விகளை சமமான மனநிலையோடு அணுக வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எங்களுக்கு நல்லதொரு தொடக்கமாக அமைந்துள்ளது. அரசியல் என்பது போர்க்களம் யாரும் கட்சியை விட்டு சென்று விட்டார்கள் என்பதற்காக நான் வருத்தப்பட்டது கிடையாது.

அதிமுகவை எதிர்த்தோம்
அடுத்தவர்களை நம்பிநான் கட்சி ஆரம்பிக்கவில்லை. ஒரு வேளை அதிமுகவுடன் இணையும் சூழ்நிலை ஏற்பட்டால் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளின் மனநிலையை புரிந்து கொண்டு அவர்களின் விருப்பப்படி செயல்படுவேன். அமமுகவை நான் விரும்பி ஆரம்பிக்கவில்லை. வேறு வழியில்லாமல் தான் கட்சியை ஆரம்பித்து அதிமுகவை எதிர்த்தோம் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications