அமமுகவிலிருந்து தங்கதமிழ்ச் செல்வன் விரைவில் நீக்கப்படுகிறார்.. டிடிவி தினகரன்
Recommended Video
சென்னை: தங்கதமிழ்ச் செல்வனிடம் இருந்து கட்சி பொறுப்புகள் பறிக்கப்படும் என்பதன் மூலம் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தங்கதமிழ்ச் செல்வன் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சனம் செய்த ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி அரசியல் களத்தை சூடேற்றி வருகிறது. இந்த நிலையில் தங்கதமிழ்ச்செல்வனின் ஆடியோ விவகாரம் குறித்து இன்று தினகரன் வீட்டில் தேனி மாவட்ட பொறுப்பாளர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அது அவசர ஆலோசனை கூட்டம் இல்லை. திட்டமிட்டே கூட்டப்பட்டது. தனியார் தொலைகாட்சி விவாதத்தில் கட்சி குறித்து அவதூறாக பேசியது எனக்கு தெரியவந்தது.

தேனி மாவட்டம்
இதையடுத்து அவரை அழைத்து பேசினேன். விஷயம் தெரிந்தால் ஊடகங்களுக்கு பேட்டி கொடுங்கள். இல்லாவிட்டால் கொடுக்காதீர்கள் என்றேன். மேலும் இது போல் மீண்டும் தொடர்ந்தால் தேனி மாவட்டச் செயலாளர், கொள்கை பரப்பு செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவீர் என எச்சரித்தேன். அவரும் அப்படியெல்லாம் இல்லை என நழுவிவிட்டு சென்றார்.

பெட்டி பாம்பு
தங்கதமிழ்ச் செல்வனால் விஸ்வரூபம் எடுக்க முடியாது. அவர் என்னை பார்த்தால் பெட்டி பாம்பாக அடங்கிவிடுவார். விஸ்வரூபம் குறித்து அவர் இரவு நேரத்தில் பேசியதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது. அவர் பேசாமல் எங்களுடன் வராமல் எடப்பாடி பழனிச்சாமியிடமே இருந்திருக்கலாம். தங்கதமிழ்ச் செல்வனை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள். சபாநாயகருக்கு எதிராக திமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பேன்.

பதவி
18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் தனபாலுக்கு ஆதரவாக எப்படி செயல்பட முடியும். தங்கதமிழ்ச் செல்வன் வகித்து வந்த பதவிகளுக்கு விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இதன் மூலம் அவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விரைவில் நீக்கப்படுவார்.

நிர்வாகிகள்
சசிகலாவிடம் பேசிவிட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். யாரை பொறுப்பிலிருந்து நீக்க அச்சமோ, தயக்கமோ இல்லை. தங்கத்தமிழ் செல்வனிடம் இனி விளக்கம் கேட்க முடியாது. ஓராண்டாக கட்சியில் சரிவர செயல்படாத நிர்வாகிகள் மாற்றப்படுவர் என்றார் டிடிவி தினகரன்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications