வாயடைக்க வச்சிட்டாரே.. தவெக விஜயை இப்படித்தான் டீல் செய்யணும்.. ஸ்டாலினுக்கு பாடம் எடுத்த தினகரன்
சென்னை: தமிழக வெற்றிக்கழகம் தொடங்கியதில் இருந்தே திமுக அவர்களை எதிர்கொள்ளாமல் இருந்தது. எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றே தெரியாமல் திமுக திணறி வந்தது. ஆனால் விஜயை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அமமுக டிடிவி தினகரன் பாடம் எடுத்துள்ளார்.
பெரிதாக தவெக பற்றியோ, விஜய் பற்றியோ பேசாமல் திமுக தவிர்த்து வந்தது. அப்படி பேசினால்.. தவெகவிற்கு அது போகஸ் கொடுக்கும் என்று திமுக நினைத்தது. ஆனால் அதுவே தவெக தொடர் புகார் வைக்க காரணமாக அமைந்தது. ஆனால் இப்போது அமமுக டிடிவி தினகரன் ஒரே இரவில் தவெக இமேஜை உடைத்துள்ளார். விஜயின் தூய சக்தி இமேஜையும் உடைத்துள்ளார்.

அடித்து நொறுக்கிய அமமுக டிடிவி தினகரன்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரவில் ஆளுநரை சந்தித்து எனது மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏவை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. குதிரை பேரம் நடந்து இருக்கலாம் என்று பரபரப்பு புகார் கூறியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எம்.எல்.ஏ காமராஜுடன் வந்து புகார்
இந்த சூழலில் அமமுக எம்.எல்.ஏ காமராஜ் ஆளுநர் மாளிகை வந்தார். இதை அறிந்த டிடிவி தினகரன் மீண்டும் நள்ளிரவில் ஆளுநர் ஆர்லேகரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் விஜய் கடிச் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். மேலும் தவெகவினர் மீது போலீசில் புகார் கொடுக்க இருப்பதாகவும் கூறினார். அவர் கூறியதாவது: -
விஜய்யின் தவெகவினர் இன்று ஆளுநரை சந்தித்த போது ஒரு கடிதம் கொடுத்து இருக்கிறார்கள். அதில் அமமுக எம்.எல்.ஏ காமராஜ் ஆதரவு அளிப்பதாக கடிதத்தை கொடுத்து இருக்கிறார்கள். இதற்கு ஆளுநர் ஒரிஜினல் எங்கே என்று கேட்டு இருக்கிறார். அப்போது ஒரிஜினல் எடுத்து வருவதாக சொல்லிவிட்டு தவெகவினர் கிளம்பியிருக்கிறார்கள்.
தவெக போலி கடிதம் கொடுத்துள்ளது
இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் இருந்து எனது வேட்பாளருக்கு போன் வந்துள்ளது. நீங்கள் ஆதரவு கொடுத்தீர்களா என்று?.. இதற்கு தான் எனது வேட்பாளர் நான் அந்த மாதிரி லட்டர் கொடுக்கவில்லை என்று கூறினார். நான் நேரிலேயே வந்துட்றேன் என ஆளுநர் மாளிகை வந்துட்டார். நான் அதிமுகவுக்கு தான் ஆதரவு அளித்து இருக்கிறேன் என காமராஜ் கூறினார். வாட்ஸ் அப்பில் வந்த ஜெராக்சை தான் தவெகவினர் ஆளுநரிடம் கொடுத்து இருக்கிறார்கள்.
இது போல் உள்ள கயவாளிகளை, மோசடி சக்திகளை தமிழகத்தில் ஆட்சி அமைக்க வைத்தால் தமிழ்நாடு என்ன ஆகும். இன்னும் ஆட்சி அமைக்கும் முன்பே இப்படி என்றால் நிலைமை இனி ரொம்ப மோசமாகும். ஆட்சி அமைக்கவிட்டால் யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இருக்காது.
கட்சி தாவல் சட்டம் வராது என்பதால் யாருடைய பெயரில் வேண்டுமானாலும் கடிதங்கள் கொடுக்க முடியும். இது குறித்து தற்போது ஆளுநரிடம் புகார் தெரிவித்து இருக்கிறோம். அவரும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறியுள்ளார். இதற்கு பிறகு நாங்கள் போலீசில் புகார் அளிக்க உள்ளோம்..
ஒரே ஒரு எம்.எல்.ஏ மட்டுமே எங்களிடம் இருப்பதனால், அவரை தூக்கினால் கட்சி தாவல் சட்டம் வராது என்பதால் எங்க எம்.எல்.ஏவை குறிவைத்து தூக்கி இருக்கிறார்கள். போலி கடிதங்களை நம்பி பிறகு எப்படி ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்.. ஒருத்தருக்கு 108 தான் இருக்கு. ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்றால் விஜய் மெஜாரிட்டியை நிரூபிப்பார் என்ற நம்பிக்கை இருந்தால் தானே கொடுப்பார்.
தவெக தான் இந்த கடிதத்தை கொடுத்து இருக்கிறார்கள். வேறு யார் அனுப்பி இருக்க முடியும். இப்போதே இப்படி இருந்தால் எப்படி, இந்த ஒரு எம்.எல்.ஏ வெற்றிக்கு நாங்கள் எவ்வளவு உழைத்து இருப்போம். அங்கு கடுமையாக உழைத்து பெற்ற வெற்றியை ஒரே ஒரு ஜெராக்ஸ் காப்பி கொடுத்து நீங்கள் குதிரை பேரம்படி தூக்கிடலாம் என செய்திருக்கிறார்கள். இதை நாங்க சும்மா விட முடியாது.. காங்கிரஸ் எப்போதுமே டுபாக்கூர் கட்சி தான்.. வேறு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு கொடுத்து இருப்பதாக சொல்லியிருக்கும் கடிதங்களையும் ஆராய வேண்டும்.. இவ்வளவு அராஜக போக்கு என்றால், நாங்க ஒன்னும் சாதாரணவர்கள் கிடையாது" என்று டிடிவி தினகரன் கூறினார்
இன்று மீண்டும் பேட்டி
இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், காமராஜ் சுயநினைவோடு எழுதியதாக கூறும் தவெகவினர் அசல் காப்பியை வெளியிடுங்கள். காமராஜ் கையெழுத்திட்ட வீடியோவின் உண்மைதன்மையை வெளியிடுவார்களா. காமராஜ் காரில் உட்கார்ந்து கையெழுத்திடும் வீடியோவை விஜய் எடுத்தாரா? புஸ்ஸி ஆனந்த் எடுத்தாரா? மாலை 6 மணிக்கு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க தனது ஆதரவு கடிதத்தை காமராஜ் கொடுத்திருக்கிறார். அப்படியிருக்கும் போது விஜய்க்கு எப்படி அவர் கையெழுத்திடுவார்.
தவெக கூறுவது போல் காமராஜ் கையெழுத்திட்டிருந்தால் அந்த காப்பி எங்கே, ஏன் அவரையும் ஆளுநர் மாளிகைக்கு அழைத்து சென்றிருக்கலாமே! என்னை பயமுறுத்தவும் என்டிஏ கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தவும் இந்த முயற்சி நடந்துள்ளது. காமராஜ் ஒன்றும் சிறுப்பிள்ளை அல்ல, படத்தை பார்த்துவிட்டு விஜய் பின்னால் செல்வதற்கு. எனவே காமராஜ் கையெழுத்து போடும் வீடியோ செயற்கை நுண்ணறிவில் செய்யப்பட்டது. நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம்.
தவெகவினர் வீடியோவை போலீஸில் கொடுத்தால் அது உண்மையா இல்லை போலியா என்பது தெரிந்து விட போகிறது. எனவே காமராஜிடம் குதிரை பேரம் செய்வதற்காகவே போலி கடிதத்தை விஜய் கொடுத்துள்ளார். விஜய் என்ன எங்களுக்கு மாமனா, மச்சானா, காமராஜ் ஏன் அவருக்கு கையெழுத்து போட போகிறார். இவ்வாறு அடுக்கடுக்கான கேள்விகளை தினகரன் எழுப்பியுள்ளார்.
இமேஜ் காலி
தவெக போர்ஜரி செய்தது.. காமராஜிடம் குதிரை பேரம் செய்வதற்காகவே போலி கடிதத்தை விஜய் கொடுத்துள்ளார்.. காமராஜ் கையெழுத்து போடும் வீடியோ செயற்கை நுண்ணறிவில் செய்யப்பட்டது. என்றெல்லாம் அட்டாக் செய்து டிடிவி தினகரன் தவெகவின் இமேஜை காலி செய்துள்ளார்.
திமுகவை திட்டியே பழகிய விஜய்.. அமமுக வருகையை எதிர்பார்க்கவில்லை. இப்போது இதற்கு பதில் எப்படி சொல்வது என்று தெரியாமல் 12 மணி நேரமாக விஜய் மௌனம் காத்து வருகிறார்.












Click it and Unblock the Notifications