சட்டசபையில் இன்று 2 ஸ்பெஷல் .. சிங்கிளாக கெத்து காட்டிய தினகரன்.. பேன்ட் சட்டையில் வந்த கருணாஸ்
சட்டப்பேரவையில் தினகரன், கருணாஸ் இருவரும் கவனத்தை ஈர்த்தனர்.
Recommended Video

சென்னை: ஒத்த ஆளாக சட்டபேரவையில் இன்று கெத்து காட்டி திரும்பி வந்திருக்கிறார் டிடிவி தினகரன்!!
தினகரன் எங்கே பேட்டி கொடுத்தாலும் சரி, பொதுக்கூட்டங்களில் பேசினாலும் சரி, அங்கே ஒரு பஞ்ச் வைத்துதான் பேசுவார்.
இவரது எந்த பேட்டியை எடுத்து பார்த்தாலும், அங்கே ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கண்டிப்பாக இருக்கும் - மற்றவர்களுக்கும் தானாக கிடைக்கும். இதுதான் இவரது ஸ்பெஷாலிட்டியே!
இன்றைக்கும் அப்படித்தான் தினகரன் எல்லோரையுமே தன் பக்கம் ஈர்த்தார். ஆளுநர் உரை இன்று துவங்கியதும் ஒவ்வொருவருவராக உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள். அப்போது, முகத்தில் தாடியுடன் என்ட்ரி ஆனார் தினகரன்.

148-வது நம்பர்
ஆளுநர் பேச ஆரம்பித்ததுமே வழக்கம்போல் திமுக வெளிநடப்பு செய்தது. கூடவே கூட்டணி கட்சியான காங்கிரசும் வந்துவிட்டது. பிரதான, ஆஸ்தான, முக்கிய, கட்சிகளே வெளிநடப்பு செய்துவிட்ட நிலையில், தனி ஆளாக 148-வது நம்பர் கொண்ட இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருந்தார் தினகரன்.

உற்று கவனித்தார்
ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என்று எத்தனையோ பேர் இருந்தாலும், அது என்னவோ தெரியவில்லை, தினகரன் மீதே அனைத்து மீடியாவின் கவனமும் இருந்தது. அடிக்கடி ஃபோகஸ் ஆகி கொண்டே இருந்தார். ஆனால் எதையும் திரும்பி பார்க்காமல், ஆளுநர் பேச்சை கடைசிவரை உற்று உற்று கவனித்து கொண்டிருந்தார்.

பஞ்ச் வைத்தார்
எதிர்க்கட்சிகள் எல்லாம் வெளியேறி விட்ட நிலையில், தனியாக உட்கார்ந்து கொண்டு, இப்படி ஆளுநரின் உரையை கடைசிவரை கவனித்ததை, அவையில் எல்லோருமே "நோட்டீஸ்" செய்தார்கள். கடைசியில் தினகரன் அவையின் வெளியே வந்ததும், "ஆளுநர் உரை சம்பிரதாய உரையாக இருந்தது, அவரது உரை அறிவிப்புகள் வானத்திற்கும், பூமிக்கும் உள்ள இடைவெளி போன்றது" என்று ஒரு பஞ்ச் வைத்துவிட்டு போனார்.

வெள்ளை வேட்டி
அதேபோல, நடிகராக இருந்து திடீர் அரசியல்வாதியாக உருமாறியவர் கருணாஸ். திருவாடானையில் போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன் வெள்ளை வேட்டி - சகிதம் என்று இறங்கினார். அதற்கு பிறகு கருணாசை நாம் எங்கு பார்த்தாலும் வெள்ளை வேட்டி-சட்டையுடனேதான் பார்க்க வேண்டி வந்தது.

ஒயிட் அண்டு ஒயிட்
ஆனால் இன்றைக்கு கருணாசிடம் அந்த "ஒயிட் அண்ட் ஒயிட்" மிஸ்ஸிங். ஃபுல் ஹாண்ட் சட்டையை இன் பண்ணிக் கொண்டு, ஷேவ் செய்த முகத்துடன் என்ட்ரி ஆன கருணாசிடம் ஏதோ புது தெம்பு தெரிந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications