என்ன ஆச்சு? டிடிவி தினகரன் பிறந்தநாள் கொண்டாட்டம்.. திடீரென ரத்து செய்யப்பட்ட ஸ்பெஷல் விசிட்!
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று எம்.ஜி.ஆர். காதுகேளாதோர் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதாக இருந்தது. ஆனால் இந்த விசிட் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளதால் நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தனது 58வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க அமமுகவினர் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் அமமுகவினர் சார்பாக மக்களுக்கு இனிப்புகள், உணவுகள் வழங்கப்பட்டு தினகரன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

பூஜை
டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு நேற்றும் இன்றும் அமமுகவினர் தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். அதேபோல் நேற்று மாலை தஞ்சாவூர் புண்ணை நல்லூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அமமுகவினர் மூலம் சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது.

எம்ஜிஆர் மன்றம்
அதேபோல் எம்ஜிஆர் மன்றம் சார்பாக சிறப்பு பூஜையும் அதே கோவிலில் மேற்கொள்ளப்பட்டது. அமமுகவினர் இணைந்து அந்த கோவிலில் மக்களுக்கு அன்னதானம் அளித்தனர். அதேபோல் அமமுக கட்சி அலுவலகங்களிலும் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு டிடிவி தினகரன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

பிறந்த நாள்
டிடிவி தினகரன் தனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று எம்.ஜி.ஆர். காதுகேளாத பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதாக இருந்தது. வழக்கமாக பிறந்த நாளின் போது அவர் இந்த பள்ளிக்கு செல்வது வழக்கம். அதேபோல் இந்த முறையும் அந்த பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு உணவுகள் மற்றும் உதவிகளை வழங்குவார் என்று கூறப்பட்டது.

சந்திப்பாரா
ஆனால் திடீரென இந்த விசிட் ரத்து செய்யப்பட்டது. எம்ஜிஆர் காதுகேளாதார் பள்ளி குழந்தைகளுடன் மதியம் 12 மணி வாக்கில் கொண்டாடவிருந்த தினகரன், அரை மணி நேரத்துக்கு முன்பு அதனை ரத்து செய்துள்ளார். காரணம் தெரியாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

என்ன நடக்கும்?
இது தவிர்த்து இன்று டிடிவி தினகரனை அவருக்கு நெருக்கமான அரசியல் தலைவர்கள், டெல்டா மற்றும் தென் மாவட்ட தலைவர்கள் சந்தித்து பேசுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலா இன்று டிடிவி தினகரனை சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சசிகலா சமீபத்தில் டிடிவி தினகரனை சந்தித்த நிலையில் பிறந்த நாளை முன்னிட்டு இவர்கள் சந்திப்பு நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications