நடக்கிறேன்.. தமிழ்நாடு பூராவும் நடக்கிறேன்... இனி ஓய்வுமில்லை.. உறக்கமும் இல்லை!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    TTV Dinakaran: அமமுகவிலிருந்து தங்கதமிழ்ச் செல்வன் விரைவில் நீக்கப்படுகிறார்: டிடிவி- வீடியோ

    சென்னை: டிடிவி தினகரன் சற்றும் அசரவில்லையாம். யார் போனால் என்ன.. யார் இருந்தால் என்ன என்ற மனப்பான்மையில்தான் இருக்கிறாராம். அடுத்து கட்சியை எப்படி பலப்படுத்துவது என்ற சிந்தனைக்குள் அவர் போய் விட்டாராம்.

    மக்களவைத் தேர்தலில் அமமுக தோல்வியை சந்திக்கும் என முன்கூட்டியே டிடிவி தினகரன் அறிந்திருந்தாலும், இந்தளவுக்கு படுதோல்வியை சந்திக்கும் என அவர் துளியும் எதிர்பார்க்கவில்லை.

    தேர்தல் முடிவு வெளியான நாளன்று படு அப்செட் ஆகிய டிடிவியை, அவரது மகள் தான் ஆறுதலும், தைரியமும் கொடுத்து தேற்றியுள்ளார். பின்னர் ஒரு வழியாக செய்தியாளர்களை சந்தித்த அவர் தெம்பாகவே பேசினார்.

    வாக்கு எங்கே போனது

    வாக்கு எங்கே போனது

    அமமுக பூத் ஏஜெண்ட் அளித்த வாக்கு எங்கே போனது என்றும், தில்லுமுல்லு நடந்திருப்பதாகவும் பேசினார். இதனிடையே தங்க தமிழ்ச்செல்வன் வெளியேறியது பற்றியும், இன்னும் சிலர் வெளியேற இருப்பது பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் தன்னை சந்திக்கும் நிர்வாகிகளிடம் எப்போதும் போல் தனது டிரேட் மார்க் சிரிப்புடன் பேசிவருகிறார்.

    ஆதங்கப்பட்ட டிடிவி

    ஆதங்கப்பட்ட டிடிவி

    இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக ஏறத்தாழ தமிழகத்தின் மூலை முடுக்குகள் எல்லாம் சுற்றி வந்தும் மக்கள் ஏன் கைவிட்டார்கள் என தனக்கு நெருங்கிய நண்பர்களிடம் ஆதங்கப்பட்டுள்ளார் டிடிவி. அவர்களோ, கடந்த தேர்தலில் நமக்கு நாமே சென்ற ஸ்டாலினையே தூக்கி எறிந்துவிட்டனர் மக்கள்.

    குழப்பிக்க வேண்டாம்

    குழப்பிக்க வேண்டாம்

    அதனால் இதைப்பற்றியெல்லாம் சிந்தித்து குழப்பிக்கொள்ள வேண்டாம் எனக் கூறினார்களாம். இதனிடையே ஆந்திராவில் ஜெகன் அடைந்துள்ள வெற்றி டிடிவி தினகரனுக்கு ஒரு வகையில் உத்வேகத்தை கொடுத்துள்ளதாம்.

    நடைபயணம்

    நடைபயணம்

    சட்டமன்றத் தேர்தலில் தான் யார் என்பதை காட்டுவேன் என சபதமேற்றுள்ள டிடிவி தமிழகம் முழுவதும் நடைபயணம் செல்ல முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தனை நாட்களாக வேன் மூலம் மட்டுமே முக்கிய நகரங்கள் வழியாக பயணத்திட்டத்தை அமைத்து வந்தார் டிடிவி.

    பயணத்திட்டம்

    பயணத்திட்டம்

    ஆனால், நகர மக்கள் கைவிட்டு விட்டார்கள் என்பதால் இனி கிராமமக்களை சந்திக்க கிராமங்கள் தோறும் செல்ல திட்டமிட்டுள்ளாராம். அதற்கான முழு பயணத்திட்டத்தை உருவாக்கும் பணிகளில் மும்முரம் காட்டத்தொடங்கியுள்ளார் டிடிவி தினகரன்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+