துருக்கி,சிரியா நிலநடுக்கம்..சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு உதவ தொலைபேசி எண்கள்..அரசு அறிவிப்பு
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு துருக்கியில் தவிக்கும் தமிழர்களுக்கு உதவ தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: நிலநடுக்கத்தால் முற்றிலும் சிதைந்து போயுள்ளது துருக்கி நாடு. அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு உதவி செய்வதற்காக தமிழக அரசு வெளிநாடு வாழ் அமைச்சகம் சார்பில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் உதவி தேவைப்படும் தமிழர்கள் 044 28525648 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அங்கு உள்ள இந்திய தூதரகம் மூலம் உதவி செய்யப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் கடந்த 3 நாட்களாக மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கிறது. பெரும் சோகத்திற்கு இடையேயும் கட்டிட குவியல்களில் இருந்து பல உயிர்கள் மீட்கப்பட்டு வருகின்றன. பச்சிளம் குழந்தைகள் உள்பட பல சிறுவர்களும், சிறுமியர்களும் எந்த வித சேதமும் இன்றி உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர். பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.

இன்றைய காலை நிலவரப்படி நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,383 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் 12391 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் 2992 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,383 ஆக அதிகரித்துள்ளது. 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
கடும் பனிப்பொழிவுக்கு இடையே கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர். இடிபாடுகளை தோண்டத்தோண்ட சடலங்கள் கிடைத்துக்கொண்டிருப்பதால் உயிர்பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. 40 மணி நேரத்திற்கும் மேலாக கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் உதவிக்காக காத்திருக்கின்றனர். கடும் பனிப்பொழிவையும் தாண்டி மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்பு பணிகளின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
நிலநடுக்கத்தால் சிக்கித்தவிக்கும் தமிழர்களுக்கு உதவி செய்வதற்காக தமிழக அரசு வெளிநாடு வாழ் அமைச்சகம் சார்பில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு உதவ அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையம் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்திய வெளியுறவுத்துறை மற்றும் தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் துருக்கி மற்றும் சிரியாவில் பாதிப்புக்குள்ளாகியிருந்தால் உடனடியாக தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களும் 044- 28525648, 044 - 28515288 வெளியிடப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications