Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துருக்கி மட்டமான வேலை.. மிஸ்சாகியிருந்தாலும், நேட்டோ நாடுகள் கோபம் இந்தியா பக்கம் திரும்பியிருக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் நிலவிய காலகட்டத்தில், துருக்கி கடற்படையின் TCG Büyükada கப்பல் கராச்சி துறைமுகத்தில் வந்து சேர்ந்தது ஒரு முக்கியமான புவிசார் அரசியல் நிகழ்வாக அமைந்தது. இந்த சம்பவம் நேட்டோ விதிமுறைகள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.

துருக்கி கடற்படையின் Ada-class ASW corvettes வகையைச் சேர்ந்த TCG Büyükada கப்பல் மே 7 வரை கராச்சி துறைமுகத்தில் தங்கியிருந்தது. இந்த கப்பல் ஓமான் மற்றும் மலேசியா துறைமுகங்களை கடந்த பிறகு கராச்சிக்கு வந்தது. துருக்கி அதிகாரிகள் இதை ஒரு "நல்லநோக்குப் பயணம்" என்று குறிப்பிட்டனர்.

Turkey Pakistan Nato Karachi

பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் இந்த வருகையை இரு நாடுகளுக்கிடையேயான கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியாகக் கூறினர். இரு நாடுகளும் சமீபத்தில் 'அததுர்க்-XIII' என்ற இணைந்த ராணுவ பயிற்சியில் பங்கேற்றுள்ளன. 2022ல் பாகிஸ்தான் துருக்கியுடன் ஒப்பந்தம் செய்து, 4 MİLGEM கவரெட்டுகளை பாகிஸ்தான் கடற்படைக்கு தயாரிக்க உள்ளது.

நேட்டோ விதிமுறை முக்கியத்துவம்

நேட்டோ (NATO) என்பது வடஅட்லாண்டிக் ஒத்துழைப்பு அமைப்பாகும், இதில் உறுப்பினர் நாடுகள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு உறுதிமொழி அளிக்கின்றன. ஒரு நேட்டோ நாடு மீது தாக்குதல் நடந்தால், மற்ற நாடுகள் அதற்கு எதிராக ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டு பாதுகாப்பு

நேட்டோவின் மிக முக்கியமான விதிமுறை Article 5 ஆகும். இது "ஒருவர் மீதான தாக்குதல் அனைவர் மீதான தாக்குதல்" என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. இந்த விதிமுறையின்படி, ஒரு நேட்டோ உறுப்பினர் நாட்டின் மீது ஆயுதத் தாக்குதல் நடந்தால், அது அனைத்து நேட்டோ நாடுகள் மீதான தாக்குதலாகக் கருதப்படும். நேட்டா நாடுகள் என்றால் ஏதோ ஒன்று இரண்டு இல்லை. மேலும் சாமானிய நாடுகளும் இல்லை. இதோ யார் யார் இருக்கிறார்கள் என்ற லிஸ்ட்டை பாருங்கள்.

நோட்ட உறுப்பு நாடுகளின் பட்டியல் (இணைந்த ஆண்டுடன்)
நாடு இணைந்த ஆண்டு
அமெரிக்க ஐக்கிய நாடுகள் 1949
பெல்ஜியம் 1949
கனடா 1949
டென்மார்க் 1949
பிரான்ஸ் 1949
ஐஸ்லாந்து 1949
இத்தாலி 1949
லக்ஸம்போர்க் 1949
நெதர்லாந்து 1949
நார்வே 1949
போர்ச்சுகல் 1949
இங்கிலாந்து 1949
கிரீஸ் 1952
துருக்கி 1952
ஜெர்மனி 1955
ஸ்பெயின் 1982
செக் குடியரசு 1999
ஹங்கேரி 1999
போலந்து 1999
பல்கேரியா 2004
எஸ்டோனியா 2004
லாட்வியா 2004
லித்துவானியா 2004
ரோமானியா 2004
ஸ்லோவாக்கியா 2004
ஸ்லோவேனியா 2004
அல்போனியா 2009
க்ரோஸியா 2009
மான்டென்க்ரோ 2017
வடக்கு மேஸ்டோனியா 2020
பின்லாந்து 2023
ஸ்வீடன் 2024

கராச்சியில் தாக்கியிருந்தால்

துருக்கி ஒரு நேட்டோ நாடாகும். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் போது, துருக்கி கடற்படை கப்பல் கராச்சி துறைமுகத்தில் வருகைதந்தது. எதிர்பாராத சூழலில், இந்தியா துருக்கி கப்பல் மீது தாக்குதல் நடத்தினால், அது நேரடியாக நேட்டோ நாடை தாக்கியதாக கருதப்படும்.
சாத்தியமான விளைவுகள்:

  • நேட்டோ நாடுகள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது
  • இது உலகளாவிய மோதலுக்கு வழிவகுக்கும் அபாயம் இருக்கிறது
  • பிராந்திய பதற்றம் சர்வதேச அளவில் விரிவடையும் சாத்தியம்

துருக்கி தந்திரம்

துருக்கி தூதுவர் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப்பை சந்தித்து, பாகிஸ்தானுடன் ஓரணியில் இருப்பதாக தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். இது துருக்கியின் வெளிப்படையான நிலைப்பாட்டை காட்டுகிறது. முன்பு நம்முடம் நட்பாக இருந்த துருக்கி, முழு இஸ்லாமிய கொள்கைகளை தழுவும் நாடாக மாறத் தொடங்கியதும் பாகிஸ்தான் பக்கம் சரிந்துவிட்டது. அதை அம்பலப்படுத்தியதுதான், சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதல்.

Turkey Pakistan Nato Karachi

விமானப்படை சர்ச்சை

இந்தியா தனது பதிலடியை தொடங்கிய நேரத்தில், துருக்கி விமானப்படை C-130 கராச்சியில் தரைநிறுத்தம் செய்தது, இது ஆயுதங்கள் சப்ளை செய்வதற்காக என்று பரபரப்பை கிளப்பினாலும், துருக்கி அரசு அதை மறுத்தது. துருக்கி அரசு "எரிபொருள் நிரப்புவதற்காக மட்டுமே" என்று சமாளித்தது.

நேட்டோ விதிமுறைகள்

நேட்டோ Article 5 இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது - 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு. அமெரிக்கா மீதான தாக்குதலை நேட்டோ நாடுகள் தங்கள் மீதான தாக்குதலாக முடிவு செய்து அட்டாக்கை ஆரம்பித்தன. கடல் பகுதியில் உள்ள நேட்டோ நாட்டின் கப்பல் மீதான தாக்குதலும் இந்த விதிமுறையின் கீழ் வரும். எனவே இந்தியாவை நேட்டோ நாடுகள் எதிர்த்திருக்கவும் வாய்ப்பு இருந்தது. எதிர்க்காமல் நாம் ராஜதந்திர நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு இருந்தது. ஆனால் துருக்கியின் நோக்கம் மோசமானது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+