பைன் போடுங்க..ஆனால் நியாயம் வேண்டாமா? தூத்துக்குடி கார் ஓனருக்கு சென்னையில் ஷாக்! ஹெல்மெட் போடலையாம்
சென்னை : சென்னையில் காரில் ஹெல்மேட் போடமால் சென்றதாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தேன்ராஜா என்பவருக்கு சென்னை பெருநக போக்குவரத்து காவல்துறை ரூ.1000 அபராதம் விதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அபராதம் விதிப்பதில் பல சிக்கல் எழுந்துள்ளதாக புகார்கள் அளிக்கப்படுகின்றன.
புதிய போக்குவரத்து விதிகளின் படி தமிழகத்தில் போக்குவரத்து விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து நாள்தோறும் முக்கிய சாலை சந்திப்புகள் தேசிய நெடுஞ்சாலைகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தலைக்கவசம் அணியாமல் செல்வது போன்ற விதி மீறும் வாகன ஓட்டிகளுக்கு எனப்படும் உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது. ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் ஸ்பாட் ஃபைன் விதிக்க இந்த விதிகள் இடம் கொடுக்கிறது.

சென்னையில் அபராதம்
இந்நிலையில் தான் சென்னையில் காரில் ஹெல்மேட் போடமால் சென்றதாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தேன்ராஜா என்பவருக்கு சென்னை பெருநக போக்குவரத்து காவல்துறை ரூ.1000 அபராதம் விதித்துள்ளது. மேலும் அதில் காருக்கு பதில் பைக் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. கோவில்பட்டியில் இருக்கும் தனக்கு எப்படி சென்னையில் சென்றதாக அபராதம் விதித்துள்ளனர் என்ற குழப்பத்தில் உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பள்ளிவாசல் தெருவினை சேர்ந்தவர் தேன்ராஜா. இவர் ஆக்டிவ் மைண்டஸ் என்ற பெயரில் அரசின் உதவி பெறும் மன நலம்பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகம் நடத்தி வருகிறார்.

ஹெல்மேட் அணியவில்லை?
இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்வதற்கு எதுவாக இருக்கும் வகையில் அம்பசிட்டர் கார் ஒன்றினை வைத்து பயன்படுத்தி வருகிறார். முறையாக அனைவத்து வரிகளையும் அரசுக்கு செலுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை திடீரென அவரது செல்போனுக்கு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் இவருடை அம்பசிட்டர் கார் எண்ணை பதிவிட்டு ஹெல்மேட் அணியவில்லை ரூ.1000 அபரதாம் விதித்துள்ளதாகவும் வந்துள்ளது.

குழப்பம்
மேலும் அதில் ஒருவர் பைக் ஓட்டிச்செல்லும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. தான் வைத்திருப்பது கார். அதற்கு எப்படி ஹெல்மேட் அபராதம் மற்றும் கோவில்பட்டியில் இருக்கும் தான் சென்னையில் சென்றதாக வந்துள்ளது, புகைப்படத்தில் பைக் படம் உள்ளதால் குழப்பத்தில் உள்ளார். மேலும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை உதவி எண்களுக்கு அழைத்தும் எவ்வித சரியான பதிலும் கிடைக்கவில்லை என்பதால் குழப்பத்தில் உள்ளார்.

அதிகரிக்கும் குளறுபடி
தனது வாகனத்திற்கு முறையாக அனைத்து வரிகளையும் செலுத்தி உள்ளதாகவும், கோவில்பட்டியில் இருக்கும் தனக்கு சென்னையில் காரில் பயணம் செய்தது போன்று, ஹெல்மேட் அணியவில்லை என்றும், ஒரு பைக் புகைப்படத்தினையும் வைத்துள்ளதால் தனக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும், சமூக விரோதிகள் இதுபோன்று வேறு ஒருவர் எண்களை பயன்படுத்திகின்றனாரா என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் இருக்கும் காருக்கு சென்னையில் சென்றதாக அபராதம் விதித்தது மட்டுமின்றி. அதில் இருசக்கர வாகனத்தின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications