Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாமே நாடகம்.. தூத்துக்குடியில் கலவரத்திற்கு முன்பே சரமாரியாக மக்களை சுட்ட போலீஸ்.. அம்பலமான பொய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தாக்குதல் நடத்திய போலீசார் இத்தனை நாட்களாக சொல்லி வந்த வாதம் ஒன்றை அருணா ஜெகதீசன் ஆணையம் முற்றிலுமாக மறுத்து உள்ளது.

தமிழ்நாட்டையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நேற்று விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டது. 2018ம் ஆண்டு இந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது.

இந்த சம்பவத்தில் 13 பேர் கொலை செய்யப்பட்டனர். போராட்டம் செய்து கொண்டு இருந்த மக்கள் மீது போலீசார் நடத்திய கண் மூடித்தனமான தாக்குதலில் 13 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

கவனம் பெற்றது

கவனம் பெற்றது

இந்த துப்பாக்கி சூடு உலக அளவில் கவனம் பெற்றது. இந்த துப்பாக்கி சூடு சட்ட விரோதமாக நடைபெற்றதாக கடுமையாக புகார்கள் வைக்கப்பட்டன. அப்பாவி மக்களை போலீசார் சுட்டதாக புகார் வைக்கப்பட்டது. ஆனால் போலீசார் தரப்போ, போராட்டக்காரர்கள் கலவரம் செய்த காரணத்தால்தான் துப்பாக்கி சூடு நடைபெற்றதாக கூறினார். அதோடு கலவரத்தில் சில விஷமிகள், சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர். அதனால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்றும் போலீசாரும், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்தனர்.

 மறுப்பு

மறுப்பு

ஆனால் போலீசார் இத்தனை நாட்களாக சொல்லி வந்த இந்த வாதத்தை அருணா ஜெகதீசன் ஆணையம் முற்றிலுமாக மறுத்து உள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிடத்தக்க வகையில் காவல் துறையினருக்கும் உயிரிழப்பு ஏற்படுத்தக்கூடிய கொடுமையான காயங்களோ அல்லது கொடுங்காயங்களோ ஏற்படவில்லை திரு.மணிகண்டன் என்ற ஒரே ஒரு காவலர் தவிர. அவருக்கு ஏற்பட்ட காயம் கொடுங்காயம், அதாவது உதட்டில் கல்லெறிதலில் காயம் ஏற்பட்டு, உதடு கிழிந்து சீழ்; பிடித்து தொடர் சிகிச்சையில் சில நாட்கள் இருந்திருக்கிறார்.

 பலர் காயம்

பலர் காயம்

ஆனால் காவல்துறையினர் பலர் காயமடைந்ததாக கூறிக் கொண்டாலும், மருத்துவ சான்றுகளின்படி, சிலருக்கு ஏற்பட்ட காயங்கள் மிகச்சாதாரண காயங்களாகவும், மற்றும் சிலருக்கு வெளிப்புற காயங்கள் ஏதும் இல்லாமலும் இருந்திருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் முதல் துப்பாக்கி சூடு நடைபெற்ற பின்பு உயிரிழப்பு ஏற்பட்ட பின்புதான் மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்குள்ளே இருந்த ஒரு சில வாகனங்களும் ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பு வாசிகளின் வாகனங்களும் ஒரு சில போராட்டக்காரர்களால் தீவைக்கப்பட்டுள்ளன. மாறாக தீ வைக்கப்பட்ட பின்பு துப்பாக்கி சூடு நடைபெறவில்லை.

ஆயுதங்கள்

ஆயுதங்கள்

காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது அபாயகரம் இல்லாத ஆயுதங்களை, உதாரணத்திற்கு கண்ணீர் புகை குண்டுகள், வருண் மற்றும் தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு தண்ணீர் பீய்ச்சி அடித்தல் ஆகியவற்றை உபயோகிப்பதில் கவனம் செலுத்தி, அவை எதுவும் எதிர்பார்த்த பயனை தராத பட்சத்தில் குறைந்த அபாயகரம் உள்ள ஆயுதங்களையோ வெடிமருந்துகளையோ உபயோகப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. மாறாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர், என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கலவரம்

கலவரம்

அதாவது போலீசாரை தாக்காமல், அவர்கள் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். கலவரத்திற்கு முன்பே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டு உள்ளது. இவ்வளவு நாள் இந்த துப்பாக்கி சூட்டிற்கு கற்பிக்கப்பட்ட நியாயம் மொத்தமாக அநியாயம் என்று தெரிய வந்துள்ளது. இந்த அறிக்கையில் ஓடிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச்சூடுக்கு முன் எவ்வித எச்சரிக்கையும் விடப்படவில்லை. துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹ 10 லட்சமும் வழங்க வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்திய 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+