தூயசக்தி தவெக! தேவதூதர் விஜய்! என்னோட ஒரே ஒரு எம்எல்ஏவை விட்டுடுங்க! தினகரன் கலாய்ப்பு
சென்னை: தவெக தலைவர் விஜய்யை தூயசக்தி, தேவதூதர், பரமாத்மா என பல்வேறு வார்த்தைகளை கூறி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலகலப்பாக பேட்டி அளித்துள்ளார்.
மன்னார்குடி எம்எல்ஏ காமராஜிடம் குதிரை பேரம் நடந்ததாக குற்றம்சாட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "காமராஜ் கொடுத்த ஆதரவு கடிதத்தை காட்டுங்கள்.

இல்லாவிட்டால் காரில் அமர்ந்து அவர் கையெழுத்திட்டிருக்கும் வீடியோவையாவது காட்டுங்கள். இந்த விஷயத்தை நாங்கள் சும்மா விட போவதில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இப்படி போர்ஜரி செய்தால் எப்படி என தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் மேலும் விமர்சிக்கையில், விஜய் ஆட்சி அமைப்பதற்கே இத்தனை போர்ஜரியை விஜய் செய்கிறார் என்றால் விஜய் தமிழகத்தை ஆட்சி செய்தால் பேரழிவு நடக்கும்.
108 சீட்களைதான் தவெகவிற்கு தமிழக மக்கள் கொடுத்துள்ளனர். மீதமுள்ள 126 சீட்களை எதிர்க்கட்சிகளுக்கு கொடுத்துள்ளனர். உங்கள் தேவதூதர் ஒரு கோடி வாக்குகளைத்தான் வாங்கியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க நாங்கள் யாரையும் காரில் உட்கார வைத்து கையெழுத்து வாங்க மாட்டோம். அந்த தூயசக்தியிடமே, பரமாத்மாவே நீங்கள் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆதரவு தாருங்கள் என்றுதான் கேட்போம். எனவே தேவதூதரே எங்களுக்கு இருப்பது ஒரே ஒரு எம்எல்ஏ, அவரை விட்டுவிடுங்கள் என தினகரன் கலாய்த்தார்.
தவெக வெளியிட்ட "ஆதார" வீடியோ
மன்னார்குடி அமமுக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாக தினகரனின் புகாரைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரப்பூர்வத் தரப்பில் இருந்து ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அது ஒட்டுமொத்த விவகாரத்தையும் தலைகீழாக மாற்றியது.
வீடியோவில் என்ன இருக்கிறது?
காமராஜ் ஒரு சொகுசு காரில் அமர்ந்து, மிகுந்த உற்சாகத்துடன் ஒரு பேப்பரில் எழுதிக் கொண்டிருக்கிறார். அருகில் இருப்பவர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டே கையெழுத்திடுவது போல் இருக்கிறது.
தவெகவின் வாதம்: "காமராஜே முன்வந்து தான் ஆதரவு கடிதத்தைக் கொடுத்தார். இப்போது அதிமுகவின் மிரட்டலுக்குப் பயந்து அவர் மாற்றிப் பேசுகிறார். வீடியோவில் இருப்பது அவர் இல்லையா? அல்லது அதுவும் போலியா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தற்போதைய சட்டச் சிக்கல்கள்
இந்த விவகாரம் இப்போது மூன்று கோணங்களில் விசாரிக்கப்படுகிறது:
ஃபோர்ஜரி (Forgery): கடிதத்தில் உள்ள கையெழுத்து உண்மையானதா? அல்லது போலியா? என்பதைச் சோதிக்க தடயவியல் துறைக்கு அனுப்பப்படலாம்.
கடத்தல்/மிரட்டல்: காமராஜ் தனது சுய விருப்பத்தின் பெயரில் அந்த வீடியோவில் இருக்கிறாரா அல்லது யாராவது அவரை மிரட்டி நடிக்க வைத்தார்களா?
ஆளுநரின் முடிவு: இரு தரப்பிலும் முரண்பட்ட தகவல்கள் இருப்பதால், காமராஜின் ஆதரவை ஆளுநர் கணக்கில் எடுத்துக்கொள்வாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
முக்கியப் புள்ளி: இந்த மோதல் டிடிவி தினகரன் vs விஜய் என்ற நேரடி அரசியல் போராக மாறியுள்ளது. "மன்னார்குடி கோட்டை" என்று கருதப்படும் அமமுகவின் கடைசி பலத்தையும் சிதைக்க விஜய் முயற்சிப்பதாக தினகரன் தரப்பு கருதுகிறது. அதே நேரத்தில், தங்களின் நேர்மையை நிரூபிக்க வீடியோவை வெளியிட்டதன் மூலம் விஜய் தரப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
விவசாய கடன் தள்ளுபடி.. டெல்டாவில் விஜய்க்கு பெருகும் எதிர்ப்பு! போராட்டத்தில் குதித்த விவசாயிகள் -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
ஓடியாங்க, ஓடியாங்க.. தமிழ்நாட்டில் முதலீடு.. விஜய் போட்ட உத்தரவு.. அமைச்சர் கீர்த்தனா-வின் 4 முக்கிய வாக்குறுதி! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டம் ஒத்திவைப்பு.. பின்னணியில் முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம்! -
8 கிராம் தங்கம் + பட்டுப் புடவை திட்டம்.. தவெக அரசு திருமண உதவித் திட்டம் விரைவில் தொடக்கம் -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்!












Click it and Unblock the Notifications