Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காருக்குள் வைத்து சீரியல் நடிகை சித்ரா கொலை?.. சடலத்தை ரூமீல் தொங்க விட்ட கொடூரம்?.. தோழி பரபரப்பு தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவை காருக்குள்ளே கொன்று விட்டு அதை தற்கொலை நாடகமாக ஹேமந்த் உள்ளிட்டோர் மாற்றியுள்ளதாக அவரது தோழி ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.

சித்ரா இறந்தது முதல் அவரது குடும்பத்தினரும் சித்ராவின் நெருங்கிய தோழியுமான ரேகா நாயரும் ஹேமந்த் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் சித்ரா மரணத்தில் இதுவரை நடந்தது என்ன என தெரியவில்லை. இதற்கு காரணம் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக ஆட்சி

அதிமுக ஆட்சி

அதிலும் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாகவும் எம்எல்ஏவாகவும் இருந்த 3 பேர் சித்ராவின் மரணத்தில் தொடர்புடையவர்கள் என ஹேமந்த் குற்றம்சாட்டியுள்ளார். இப்படி ஹேமந்த் அரசியல்வாதிகளையும் போதை கும்பலையும் ஆண் தொகுப்பாளர் ஒருவரையும் கையை காண்பித்து வருகிறார்.

நெருக்கமானவர்கள்

நெருக்கமானவர்கள்

ஆனால் சித்ராவுக்கு நெருக்கமானவர்கள் அதாவது உறவினர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் சித்ராவின் மரணத்திற்கு ஹேமந்த் மட்டும்தான் காரணம் என்கிறார்கள். சித்ரா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஹேமந்த்தான் அழைத்து சென்றார். எனவே சித்ராவுக்கு எது நடந்தாலும் அவர்தான் பொறுப்பேற்க வேண்டும் என அவரது தாய் கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்.

சித்ராவின் தோழி

சித்ராவின் தோழி

ஆனால் சித்ராவின் தோழி ரேகா நாயரோ அவர் குறித்து பல்வேறு விஷயங்களை வெளியிட்டு வருகிறார். இதை நிறுத்திக் கொள்ளுமாறு சித்ராவின் தாய் ரேகா நாயரிடம் கடிந்து கொண்டதாக ரேகாவே தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரேகா நாயரின் சந்தேகம் ஹேந்த் மீது மட்டுமல்லாமல் மேலும் சில அரசியல்வாதிகளும் இணைந்திருக்கலாம் என்கிறார்.

ஹேமந்த்தை கிழித்த ரேகா நாயர்

ஹேமந்த்தை கிழித்த ரேகா நாயர்

இது குறித்து அவர் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் படப்பிடிப்பு முடித்துக் கொண்டு காரில் ஹேமந்துடன் சென்ற சித்ராவை காரிலேயே கொலை செய்து பின்னர் அந்த சடலத்தை ஹோட்டல் ரூமில் தொங்க விட்டு தற்கொலை நாடகம் ஆடியுள்ளனர். இதை ஹேமந்த் மட்டுமே செய்திருக்க வாய்ப்பில்லை. அவருடன் சேர்ந்து 4 பேர் கொண்ட கும்பல் இந்த கொலையை செய்திருக்கலாம். சித்ரா இறந்தப்பவே நானும் செத்திருப்பேன். ஆனால் உண்மையை கூறுவதற்காக தான் உயிரோடு இருக்கிறேன் என ஹேமந்த் கூறுகிறாரே, ஏன் சித்ரா இறந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது, இன்னும் உண்மையை எப்போது சொல்வாராம். இதிலிருந்தே அவர் பித்தலாட்டம் நன்றாக தெரிகிறது என்கிறார் ரேகா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+