Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலினே விசில் சின்னத்துக்குதான் ஓட்டு போடுவாரு.. தவெக தான் டாப் இன்ஜின் - விஜய் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக கட்சியின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் நடைபெற்றது. இதில் பேசிய விஜய், என்னைக்காவது முதல்வர் ஸ்டாலின் அசந்து தூங்கும்போது, அப்போது அவரிடம் போய் சார் எந்த சின்னத்திற்கு ஓட்டு போடுவீர்கள் என்று கேட்டு பாருங்கள், விசில் சின்னத்துக்கு தான் ஓட்டு போடுவேன் என்று அவரே சொல்வார். இந்த டப்பா இன்ஜின், ஓட்டை இன்ஜின், எவ்வளவு இன்ஜின் வந்தாலும், டாப் இன்ஜின் நம்ம தவெக தான் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்று பேசினார்.

தவெகவின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சித் தலைவர் விஜய், கொள்கைத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தி, கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, நிழ்ச்சியில் விஜய் பங்கேற்றுப் பேசுகையில், தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சியாக நாம் வளர்ந்திருக்கிறோம். அது உங்களால் தான். நம்மை நேசிக்கிற கோடிக்கணக்கான மக்களும்தான் மிகப்பெரிய காரணம்.

tvk-3rd-anniversary-stalin-himself-will-vote-for-the-whistle-symbol-says-vijay

நீங்கள் தான் என் பலம்

நீங்கள் தான் என்னுடைய மிகப்பெரிய பலம். உங்களை நம்பித்தான் நாங்களும், கட்சியும் இருக்கின்றோம். 1977 ஜூன் மாதத்தில் எம்ஜிஆர் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அப்போது, அண்ணா இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமருகின்ற நிலை ஏற்பட்டுவிட்டதே என்று நினைத்து கண்ணீர் விட்டு அழுதேன். அன்று அந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம்தான் அதிமுக என்று கூறினார்.

2017, 2021க்குப் பிறகு தமிழ்நாட்டின் நிலையைப் பற்றி யோசித்த தமிழக மக்கள் காமராஜர் இருந்த இடத்தில், அண்ணா, எம்ஜிஆர் இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமரும் நிலை ஆகிவிட்டதே என்று நினைத்து கண்ணீர் வடித்தனர். இன்றைக்கு இந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த கட்சிதான் தமிழக வெற்றிக் கழகம். இப்படியெல்லாம் நாம் பேசுவதைப் பார்த்து சிலர் கொந்தளிப்பார்கள். அதைப் பற்றி நாம் கவலைப்படக் கூடாது. ஏனென்றால் கொந்தளிப்பது தான் அவர்கள் வேலையே.

எம்ஜிஆருக்கும் என் நிலை தான்

எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது, ஜெயித்து போதும் கூட சட்டசபையில் கேலி கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டார். விஜய்க்கு என்ன பெரிய அனுபவம் இருக்கிறது என்று கேட்ட அதே வாய் தான் அன்று எம்ஜிஆரைப் பற்றியும் பேசியது. அரசியல் அரிச்சுவடி தெரியாதவர், கவர்ச்சியை மட்டுமே நம்பியவர், அட்டக்கத்தி, நிருபர்களைச் சந்திக்க மாட்டார், வாய் விளம்பர வள்ளல், பதில் சொல்ல தெரியாதவர், கேள்வி கேட்க மட்டுமே தெரியும் என்று பேசினர்.

எம்ஜிஆர் அவர்களை மட்டுமல்ல அவர்களுடைய தொண்டர்களையும் அப்படித்தான் பேசினார். மக்கள் அமைதி காத்து என்ன செய்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அதன் பிறகு அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கு கூட கோட்டை என்பது அவர்களுக்குப் பகல் கனவாகவே மாறிவிட்டது. இன்னும் பழைய தேய்ந்து போன, துருப்பிடித்துப் போன, நஞ்சுபோன பழைய ஆயுதத்தைக் கையில் எடுக்கின்றனர்.

பவள விழா பாப்பா..

டெக்னாலஜி டெவலப்பாகி எங்கோ சென்று கொண்டிருக்கிறது. அதனால், உங்களுடைய டெக்னிக்கையாவது மாற்றுங்கள். காமராஜரையும் விட்டு வைக்கவில்லை. அவருக்கு இலக்கியம் தெரியுமா என்றெல்லாம் பேசினார்கள். இப்படி அவர்கள் செய்கிற அராஜகம், ஊழலைப் பற்றி சொன்னால், முக்கியமாக நாம் எடுத்து சொன்னால் அதே பழைய டப்பாவை உருட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.

பவள விழா பாப்பாவுக்கு என்ன தெரியும். பழைய டப்பாவைத் தான் உருட்ட தானே தெரியும். நம்மை தவிர அவர்களை எதிர்த்து கேள்வி கேட்கும் தில் யாருக்கு இருக்கிறது. மக்களுடைய ஒரே பிரதிநிதி நாம் மட்டும்தான். டிஜிட்டல் உலகில் திருவள்ளுவர் இருந்திருந்தால் திமுக தீயசக்தியைப் பற்றி, அநீதி அரஜாகம் தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு என்று குறள் எழுதியிருப்பார்.

விஜய் வீட்டை விட்டு வெளியே வா

மும்முனை போட்டி, நான்குமுனைப் போட்டியில் மாபெரும் மக்கள் சக்தியாக நம் அணி ஒருபக்கம், திமுக தலைமையில் மற்ற கூட்டணி கட்சிகள் ஒரு பக்கம், பாஜக தலைமையில் மற்றும் பலர். இப்படி எத்தனை சக்திகள் வந்தாலும் திமுகவை வீழ்த்துவதற்கு மாபெரும மக்கள் சக்தியான நம்மாள் மட்டுமே முடியும் இப்படி இருக்கும் நிலைமையில், ஏ விஜய் வீட்டை விட்டு வெளியே வா, ஏ விஜய் வீட்டை விட்டு வெளியே வா என்று எல்லாம் கேட்கும் போது, இவர்கள்ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் விஜயை கூப்பிடும் மாதிரி தெரிகிறது.

அதனால் பொறுங்கள் பாஸ், வருவார்கள். ஓட்டு போடும் அன்றைக்கு ஒவ்வொரு வீட்டில் இருக்கும் ஒவ்வொரு விஜயும், விஜியும் பூத் பூத்தாக காலையில் வந்து நிற்பார்கள். அன்றைக்கு பாருங்கள் ஏன் இந்த விஜயை கூப்பிட்டோம் என்று தெரியும். நான் சினிமாவை விட்டாலும் நீங்கள் விட மாட்டீங்களே, இப்பொழுது கருத்துக்கணிப்பு என்று ஒன்று போய் கொண்டு இருக்கிறது. அதில் நிறைய பேர் உண்மையான கருத்துக் கணிப்புகள் சொல்கிறார்கள் அதனை நான் தப்பு சொல்லவில்லை.

கடுப்பு கருத்துக் கணிப்புகள்

சிலர் கடுப்பில் விட்ட கருத்துக் கணிப்பும் இருக்கிறது. கடுப்பில் விட்ட கணிப்பாளர்களுக்கு நான் சொல்வது, "ஒவ்வொரு ஊர் ஊராக, வீடு வீடாக நீங்கள் கருத்துக்கணிப்பு எடுத்து பாருங்கள் ஒவ்வொரு வீட்டிலும் தவெக இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அதிர்ச்சியாக இருந்தால் திரும்ப கருத்துக்கணிப்பு எடுங்கள். அதே ரிசல்ட் தான் வரும். நமது சிஎம் சார், ஸ்டாலின் சார் இருக்கிறார்கள். 2 வருடங்களுக்கு முன் மேடையில் பேசும்போது எனது கட்சியினரின் அட்ராசிட்டியால், மந்திரிகள் செய்யும் அட்ராசிட்டியை பார்த்து ராத்திரி தூக்கம் வரவில்லை என்றார்.

அவர் என்னைக்காவது அசந்து தூங்கும்போது, அப்போது அவரிடம் போய் சார்.. சார்.. எந்த சின்னத்திற்கு ஓட்டு போடுவீர்கள் என்று கேட்டு பாருங்கள், விசில் சின்னத்துக்கு தான் ஓட்டு போடுவேன் என்று சொல்வார். விசில் சின்னம் போகாத ஊரே இல்லை. விசில் சின்னம் எங்கு எல்லாம் இருக்கிறதோ அங்கு எல்லாம் தவெக இருக்கிறது. என்னுடைய அம்மா, தங்கைகள், அண்ணன், தம்பிகள் தவெகவுக்கு தவெகவுக்கு ஓட்டு போடுவதை யாராலும் தடுக்க முடியாது. ரத்த சொந்தமாக நம்மை நினைப்பவர்களை எந்தக் கட்சியாலும், எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்கவே முடியாது.

தவெக தான் டாப் இன்ஜின்

நான் ஓவர் நம்பிக்கையில் பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள். கள நிலவரம், கள யதார்த்தமும் இதுதான். தீயசக்தியை வீழ்த்துவதற்கு தூய சக்தியான நம்மால் தான் முடியும். 2026 தேர்தலில் மக்களுக்கு ஒரே ஆப்ஷன் தவெக தான். இந்த டப்பா இன்ஜின், ஓட்டை இன்ஜின், எவ்வளவு இன்ஜின் வந்தாலும், டாப் இன்ஜின் நம்ம தவெக தான் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டனர். இதனை மனதில் வைத்து கொண்டு கட்சியினர் வேலை செய்ய வேண்டும்.

விசில் சின்னத்துக்கு ஓட்டு போட வைப்பது தான் உங்களது வேலை. மற்றது எல்லாம் மக்களுடன் இணைந்து நான் பார்த்து கொள்கிறேன். ஓட வேண்டும்
நம்ம மக்கள் விசில் ஊதுற ஊதில் இந்த ஊழல் சக்தியும், தீய சக்தியும் தெறித்து ஓட வேண்டும். அன்றைக்கு தவெக ஆளும் கட்சியாக எழும். உங்களுடன் நான் இருக்கிறேன். நம்முடன் மக்கள் இருக்கிறார்கள். இதுக்கு மேல் என்ன வேண்டும்? நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம். மீண்டும்
சந்திக்கும் வரை நன்றி, வணக்கம் என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+