"விஜய் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளாரா? தவெக என்றால் திமுகவிற்கு அலர்ஜி" - டிடிவி தினகரன்
திருச்சி: தவெக என்றால் திமுகவிற்கு அலர்ஜி என்பது அவர்கள் பேசுவதில் இருந்து தெரிகிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி குறித்து பேசி வருவதாகவும், ஜனவரி மாதத்துக்கு பிறகு தெரியவரும் என்றும் கூறியுள்ளார் டிடிவி தினகரன்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், "95 சதவீதம் எஸ்ஐஆர் படிவங்கள் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் தாங்கள் வசிக்கிற பகுதியில் ஓட்டுரிமை பெற்றுத்தர தங்களின் கடமையாக செய்து வருகின்றனர். எதனால் குற்றம்சாட்டுகின்றனர் எனத் தெரியவில்லை. எஸ்ஐஆர் பணிகள் சரியாகத்தான் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

மெட்ரோ ரயில் குறித்து திமுக, பாஜக மாறி மாறிப் பேசி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி நான் ஆட்சிக்கு வந்தால் கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் கொண்டு வருவேன் என்கிறார் இது கண்டனத்துக்கு உரியது. இது மக்களின் தேவை. கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் வேண்டும் என மாநில அரசு கேட்டால் மத்திய அரசு உதவி செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி வந்தால் கொண்டு வருவோம் என்பது காழ்ப்புணர்ச்சியோடு அணுகுவது போல் உள்ளது. மக்கள்தொகையை கருத்தில் கொண்டு வளர்ந்த நகரங்களில் மெட்ரோ ரயில் கொண்டு வந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்.
போதைப் பொருள் பழக்கம் மூலம் கொலை, கொள்ளை அதிகரிப்பதை சட்டம் ஒழுங்கை கையில் வைத்துள்ள ஸ்டாலின் கட்டுப்படுத்தவில்லை என்றால் திமுகவிற்கு எதிராக தேர்தலில் இது எதிரொலிக்கும். கூட்டணி குறித்து எங்களிடம் பேசிக்கொண்டு உள்ளனர். கூட்டணி அமைந்த பிறகு அதை குறித்து பேசுகிறேன். விஜய் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் என அப்பாவு கூறியது அவருடைய கருத்து. தவெக என்றால் திமுகவிற்கு அலர்ஜி என அவர்கள் பேசுவதில் இருந்து தெரிகிறது" எனத் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று கரூர், வெண்ணைமலை அருகே அமமுக மாவட்ட செயலாளர் பிஎஸ்என் தங்கவேல் இல்ல திருமண விழாவில் பங்கேற்க அமமுக பொது செயலாளர் டி டி வி தினகரன் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார். இந்த திருமண நிகழ்விற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் வருகை தந்தார். அப்போது அண்ணாமலை, டிடிவி தினகரனுக்கு சால்வை அணிவித்தார். இருவரும் சில நிமிடங்கள் பேசினர்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அண்ணாமலை உடன் கூட்டணி குறித்து ஏதாவது பேசினீர்களா என்ற கேள்விக்கு, அண்ணாமலை அமமுக மாவட்ட செயலாளரின் உறவினர். கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை" என்றார். மேலும், விஜய்யுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு? ஜனவரி மாதத்துக்கு பின்பு தெரியும் எனத் தெரிவித்தார்.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!











Click it and Unblock the Notifications