தவெக வேட்பாளருக்காக மொத்தமாக கைகோர்த்து களமிறங்கும் கூட்டணி கட்சிகள்! சற்று நேரத்தில் பொதுக்கூட்டம்
சென்னை: மதுராந்தகத்தில் இன்று தவெக வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் பரப்புரை மேற்கொள்கின்றனர். இந்தப் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக எம்.பி துரை வைகோ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு, வரும் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 5 முனை போட்டி உருவாகியுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் வேட்பாளர்களின் அதிரடி பிரசாரத்தால், இரு தொகுதிகளும் தேர்தல் களம் களைகட்டியுள்ளது.

தவெக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் கடந்த 25 ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது இடைத்தேர்தலில் தீய சக்திக்கும், மற்றும் பலருக்கும் நீங்கள் சரியான ஒரு பாடம் புகட்ட வேண்டும் என விஜய் பேசினார்.
இந்நிலையில், மதுராந்தகத்தில் தவெக வேட்பாளரை ஆதரித்து தவெக கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று பிரசாரம் மேற்கொள்கின்றனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக எம்.பி துரை வைகோ உள்ளிட்டோர் பங்கேற்று வாக்கு சேகரிக்க உள்ளனர். ஐ.யூ.எம்.எல் தலைவர்கள், தமாகா தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
மதுராந்தகம் ஹைவேஸ் சாலையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட பொதுக்கூட்ட மேடையில் தவெக கூட்டணி கட்சி தலைவர்கள் உரையாற்றி வாக்கு சேகரிக்க உள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் இந்தப் பொதுக்கூட்டம் தொடங்குகிறது. தவெக தலைமையில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தொடங்கப்பட்ட நிலையில், இந்தக் கூட்டணி சார்பில் முதல் பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது.


Click it and Unblock the Notifications
