Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிமாண்ட் இதுதான்.. பட்டென கேட்ட வேல்முருகன்.. உறுதி கொடுத்த திமுக குழு.. 1 சீட் கன்ஃபார்மா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்க திமுகவிடம் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். திமுக கூட்டணியில் தவாக கேட்கும் தொகுதியை ஒதுக்குவார்கள் என நம்புகிறேன் என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுகவை பொறுத்தவரை, கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியையும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியையும் ஒதுக்கீடு செய்தது திமுக.

TVK alliance talk with dmk Velmurugan demand to dmk

தவாக உடன் திமுக பேச்சுவார்த்தை: அதைத் தொடர்ந்து, மூன்று கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், 2 இடதுசாரி கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள தலா 2 தொகுதிகள் எவை எவை என்பது இன்னும் இறுதிசெய்யப்படவில்லை.

இந்நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று திமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் முதல்வர் ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், "லோக்சபா தேர்தலில் திமுகவிடம் ஒரு சீட் கேட்டுள்ளோம். நாளை பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் அழைத்துள்ளார்" என்றார்.

வேல்முருகன் பேட்டி: அதன்படி, இன்று சென்னை தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாலயத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், திமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் பேசினார். அப்போது, வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் 1 சீட் ஒதுக்குமாறு கேட்டுள்ளார் வேல்முருகன். தொடர்ந்து, திமுக தலைவரிடம் ஆலோசித்துச் சொல்வதாக திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன், "மக்களவைத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு 1 இடம் ஒதுக்க வேண்டும் என திமுகவிடம் கேட்டுள்ளோம். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனிவோடு தெரிவித்துள்ளார்.

சீட் வேண்டும்: நாங்கள் திமுக கூட்டணியில் எம்.பி சீட் கேட்பதற்கான நியாயமான காரணங்களையும் தெரிவித்துள்ளேன். கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் தமிழ்நாடு முழுவதும் பிரச்சார பீரங்கியாக இருந்து, இந்த கூட்டணியின் வெற்றிக்கு நானும் ஒரு சிறு பங்காற்றி இருக்கிறேன்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் குரல் ஒலிக்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தினேன். அதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நல்ல பதிலை தருவதாக கூறி இருக்கிறார்கள். மேலும், தேர்தலுக்கு முன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன்.

எங்கு வேண்டுமானாலும் நிற்கத் தயார்: நாங்கள் கேட்டிருக்கும் ஒரு தொகுதியை தி.மு.க ஒதுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை எங்களுக்கு கட்சி கட்டமைப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடத் தயாராக உள்ளது தமிழக வாழ்வுரிமைக் கட்சி." எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது எம்.எல்.ஏவாக உள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 1 தொகுதியிலாவது களம் கண்டுவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் வேல்முருகன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+