ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ்
சென்னை: "ஜனநாயகன்" படத்தில் என்னை நடிக்க வைத்ததே விஜய்தான் என தவெக நிர்வாகி அருண்ராஜ் விளக்கம் அளித்திருக்கிறார். விஜய்யின் கடைசி படத்தில் அருண்ராஜை நடிக்க வைத்திருக்கிறார். இந்த படத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
தவெக கொள்கை பரப்புச் செயலாளராக இருப்பவர் அருண்ராஜ். இவர் வருமான வரித் துறை அதிகாரியாக இருந்தவர். விஜய் கட்சி தொடங்கியதும் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஜய் கட்சியில் இணைந்துவிட்டார்.

தவெக தொடங்க அருண்ராஜும் ஒரு காரணம் என்கிறார்கள். வருமான வரி சோதனையின் போது விஜய்க்கு இவர் உதவியதால் அருண்ராஜ் மீது அவருக்கு அளவு கடந்த மரியாதை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தவெக அருண்ராஜ் என்று அழைக்கப்படும் கே.ஜி. அருண்ராஜ் முன்னாள் இந்திய வருவாய் சேவை அதிகாரி ஆவார். அவர் வரி துறையில் பணியாற்றிய பிறகு விருப்ப ஓய்வு பெற்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தற்போது கட்சியின் கொள்கை பரப்பு மற்றும் கொள்கை பொதுச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார்.
விஜய்யின் நம்பிக்கைக்குரிய நிர்வாகிகளில் ஒருவராக இருப்பதால் கட்சியின் ஊடக உறவுகள், பிரச்சாரங்கள், கொள்கை விளக்கங்கள் ஆகியவற்றில் மிக முக்கிய பங்காற்றி வருகிறார்.
தேர்தல் அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அவர், அது சமூக நீதியை காக்கும் வகையில் அமையும் என்று தெரிவித்துள்ளார். கட்சி தனித்து போட்டியிடும் என்றும், மக்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். பாஜகவின் அழுத்தங்களுக்கு விஜய் அடிபணியவில்லை என்றும், பாஜகவை இலட்சிய எதிரியாகவே கருதுவதாகவும் அவர் தெளிவாக கூறியுள்ளார். மத்திய அரசு பல்வேறு வழிகளில் அழுத்தம் கொடுப்பதாகவும், ஆனால் கட்சி நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் சமீபத்தில் விமர்சித்துள்ளார்.
சமூகநீதி, மதச்சார்பின்மை ஆகியவை தவெகவின் அடிப்படை கொள்கைகள் என்று வலியுறுத்துகிறார். திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு பற்றியும் சமீபத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.
கட்சியின் பேனர் விவகாரங்கள், அதிகாரிகள் மிரட்டல் குற்றச்சாட்டுகள் போன்ற சர்ச்சைகளிலும் அவர் பதிலளித்து வருகிறார். ஒட்டுமொத்தமாக தவெகவின் மிக முக்கியமான முகங்களில் ஒருவராக அருண்ராஜ் திகழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் ஜனநாயகன் படத்திலும் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ஜனநாயகன் படத்தில் என்னை நடிக்க வைத்ததே விஜய்தான். நடிக்க ஆசையாக இருப்பதாக விஜய்யிடம் சொல்லியிருந்தேன். அதற்காக கடைசி படத்தில் என்னை நடிக்க வைத்தார். ஜனநாயகன் படத்திற்காக 1 நாள் முழுவதும் ஷூட்டிங்கில் பங்கேற்றேன் என அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் அந்த படம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் ரிலீஸாகவில்லை. இந்த நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதிக்கு மேல் இந்த படம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.
-
சட்டஒழுங்கு நெருக்கடி.. உள்துறையை விட்டுக் கொடுக்கிறாரா முதல்வர் விஜய்? கைமாறும் போலீஸ் கண்ட்ரோல்? -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சிரிக்க கூட முடியாத அளவிற்கு.. அப்செட்டான விஜய்.. மனசை குடையும் 2 விஷயங்கள்! என்ன நடந்தது? -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
திமுக ஆட்சியில் தேவையில்லாத திட்டங்கள் எதுவுமில்லை.. அமைச்சர் மரிய வில்சன் சொன்ன வார்த்தை! -
தவெக அரசுக்கு எதிராக நூதன போராட்டம்... முதல்வருக்கு பார்சலில் அனுப்பிய ஹியரிங் எய்டு! -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
மாஸ்டர் மகேந்திரன் திடீரென்று மன்னிப்பு கேட்ட காரணம் இதுதானா? பின்னணியில் விழுந்த "டோஸ்”! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம்










Click it and Unblock the Notifications