புஸ்ஸி ஆனந்த் படைத்த புது வகை சாதனை! தவெக செம குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்னை தி நகர் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் புஸ்ஸி ஆனந்த் புதிய சாதனையை படைத்துள்ளார். இதனால் தவெகவினர் குஷியாகி உள்ளனர். அப்படி புஸ்ஸி ஆனந்த் என்ன சாதனை படைத்தார்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 108 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைக்க தேவையான 118 எம்எல்ஏக்கள் கிடைக்காவிட்டாலும் கூட தவெக தனிப்பெரும் கட்சியாக மாறி உள்ளது.

tvk-bussy-anand-creates-new-record-the-man-who-elected-as-a-mla-in-tamil-nadu-and-puducherry

மெஜாரிட்டி பெற காங்கிரஸ் உள்பட பிற கட்சிகளிடம் தவெக ஆதரவு கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் விஜய், நாளை தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வேளையில் தவெக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி, மெஜாரிட்டியை நிரூபிக்க 14 நாள் காலஅவகாசம் கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல்வராகும் விஜய்

அதன்பிறகு நாளை மறுநாள் (வியாழன்) தமிழகத்தின் முதல்வராக விஜய் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாகவும், இந்த பதவியேற்பு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. முதலில் முதல்வராக பொறுப்பேற்கும் விஜய் அதன்பிறகு சட்டசபையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டுள்ளாராம்.

புஸ்ஸி ஆனந்த் வெற்றி

இது ஒருபுறம் இருக்க தவெக பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். சென்னை தியாகராய நகர் (தி நகர்) தொகுதியில் புஸ்ஸி ஆனந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் புஸ்ஸி ஆனந்த் மொத்தம் 51,632 ஓட்டுகள் பெற்றார்.

இவரை எதிர்த்து களமிறங்கிய அதிமுக வேட்பாளர் சத்தியநாராயணன் 38,605 ஓட்டுகள் வாங்கினார். இதனால் புஸ்ஸி ஆனந்த் 13,027 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் 37,017 ஓட்டுகளுடன் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் புஸ்ஸி ஆனந்த், தி நகர் எம்எல்ஏவாக தமிழக சட்டசபைக்குள் என்ட்ரி கொடுக்கிறார்.

புதுச்சேரி எம்எல்ஏவாக..

முன்னதாக விஜய் உடன் சேருவதற்கு முன்பு புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் எம்எல்ஏவாக இருந்தார். கடந்த 2006 புதுச்சேரி சட்டசபை தேர்தலில் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் என்ற கட்சி சார்பில் புஸ்ஸி தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் புஸ்ஸி ஆனந்த் மொத்தம் 2,423 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார்.

இந்த தொகுதியில் திமுகவின் சிட்டிங் எம்எல்ஏவாக களமிறங்கிய அன்னபால் கென்னடியை, புஸ்ஸி ஆனந்த் தோற்கடித்தார். அன்னிபால் கென்னடியை (பெற்ற வாக்குகள் 1,952) 471 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். அதன்பிறகு புஸ்ஸி சட்டசபை தொகுதி, மறுவரையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு மறைந்து போனது.

புஸ்ஸி ஆனந்த் சாதனை

இதன்மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி என 2 இடங்களில் எம்எல்ஏவான ஒரே நபர் என்ற பெருமையை புஸ்ஸி ஆனந்த் பெற்றுள்ளார். மேலும் விஜய் உடன் புஸ்ஸி ஆனந்த் பிஏவாக பணியாற்றி வந்தாலும் கூட அவரது ஓட்டு புதுச்சேரியிலேயே இருந்து வந்தது.

ஆனால் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியவுடன் அவர் தனது வாக்கை செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கர் தொகுதிக்கு மாற்றினார். இப்போது சென்னை தி நகரில் போட்டியிட்டு எம்எல்ஏவும் ஆகி புதிய சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+