ஆங்கில சேனலுக்கு ஆட்டம் போட்ட விஜய் ரசிகர்! நிருபரின் கழுத்தில் தவெக துண்டு போட்டு அநாகரீகம்!
சென்னை: அரியலூரில் கடந்த சனிக்கிழமை விஜய்யின் தேர்தல் பிரச்சாரம் குறித்து ஆங்கில ஊடகத்தின் நிருபர் நேரலையில் விளக்கிக் கொண்டிருந்த போது தவெகவை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அநாகரீகமான முறையில் குத்தாட்டம் போட்டு, அந்த நிருபரின் கழுத்தில் தவெக துண்டை போட்டும் கலாட்டா செய்தது பல்வேறு கண்டனங்களுக்குள்ளாகியுள்ளது.
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக ஆகிய கட்சிகள் களத்தில் இருக்கின்றன. பாமக, அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தனியே கூட்டணி அமைக்கிறார்களா அல்லது மேற்கண்ட கட்சிகளுடன் கூட்டணிக்கு போகிறார்களா என்பது போக போகத்தான் தெரியும்.

இன்னும் தேர்தலுக்கு 8 மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தவெகவும் களத்தில் இறங்கியுள்ளது. கடந்த 13-ஆம் தேதி முதல் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அவர் திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
விஜய்யின் முதல் தேர்தல் பிரச்சாரம் என்பதால் தமிழ், ஆங்கில மீடியாக்கள் அவற்றை செய்தியாக்கின. திருச்சி மரக்கடை அருகே பிரச்சாரம் செய்ய விஜய்க்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் வழிநெடுகிலும் தொண்டர்கள் சாரை சாரையாக குழுமியிருந்ததால் அவரது வாகனம் 15 நிமிட தூரத்தை கடக்க 5 மணி நேரமானது. இதையடுத்து திருச்சியில் திறந்தவெளி பஸ்ஸில் ஏறி பேசிவிட்டு அரியலூர் சென்றார்.
அரியலூருக்கு விஜய் வருகை குறித்தும் அவருக்கான ஏற்பாடுகள் குறித்தும் என்டிடிவியின் ஆங்கில செய்தி நிருபர் சாம் டேனியல், தொலைக்காட்சி நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்தார். அதை வீடியோகிராபர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது தவெக தொண்டர் ஒருவர் கேமரா முன்பு குத்தாட்டம் போட்டார். நிருபர் செய்தியை வழங்குவதற்கு இடையூறு செய்தது போல் அந்த நிர்வாகியின் செயல் இருந்தது. அவர் ஆடியது உற்சாகத்தை தராமல் கோபத்தைத்தான் தந்தது. ஒருவர் செய்தி சொல்லிக் கொண்டிருக்கும் போது பக்கத்து வந்து ஆடுவது என்பது எத்தனை அபத்தம்!
அத்துடன் அவரது கட்சித் துண்டையும் பிடித்துக் கொண்டும் சுற்றிக் கொண்டும் ஆடிய நபர், திடீரென அந்த நிருபரின் கழுத்தில் அந்த தவெக துண்டை போட்டார். உடனே அந்த நிருபர் கோபத்துடன் அந்த துண்டை எடுத்துவிட்டு அவர் செய்தி வழங்கினார். ஒரு கட்டத்தில் நிறைய நிர்வாகிகள் இணைந்து நிருபரையே மறைத்துக் கொண்டு வீடியோ கேமரா முன்பு ஆட்டம் போட்டனர். பின்னர் அவர்களை விலக்கிக் கொண்டு வந்த சாம், தனது பணிகளை தொடர்ந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைலராகி வருகிறது. இந்த வீடியோவை தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் பகிர்ந்த விமர்சகர் ப்ளூசட்டை மாறன், "அந்த தம்பியை யாரும் திட்டாதீங்க.. வருங்கால அமைச்சராக கூட வாய்ப்பிருக்கு. NDTV செய்தி சேனலின் மூத்த நிருபர் சாம் டேனியலிடம் மாஸ் காட்டிய அணில் குஞ்சு என்று பதிவிட்டுள்ளார்.
இவர்களது இழிவான செயல் குறித்து நாம் தமிழர் கட்சியினர், பாஜக உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்துள்ளனர். அந்த வகையில் மூத்த நிருபர்களும் அந்த தவெக நிர்வாகியின் செயலை கண்டித்தார். இதுவரை பாஜக, பாமக, திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட எந்த கட்சிகளின் தொண்டர்களும் நிருபர்களிடம் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் செய்தி சேகரிக்கத்தான் உதவுவார்கள் என விமர்சித்துள்ளனர்.
தொண்டர்களுக்கு அரசியல் என்றால் என்ன என்பதை முதலில் விஜய் கற்றுத் தர வேண்டும். இல்லாவிட்டால் இப்படித்தான் தற்குறித்தனம் செய்து கொண்டிருப்பார்கள் என்றும் சமூகவலைதளங்களில் கண்டனங்கள் குவிகின்றன.
-
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
என்னது நாங்க தவெகவை கூட்டணிக்கு அழைத்தோமா.. கடுகடுத்த செல்லூர் ராஜூ












Click it and Unblock the Notifications