TVK candidate list: தவெக வேட்பாளர் பட்டியல்! கோபியில் ’சீனியர்’ செங்கோட்டையன்! 10வது முறையாக களம் காண்கிறார்!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களமிறங்குகிறார் விஜய். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயரை அறிவித்திருக்கிறார். அந்த வகையில் கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிடுகிறார் அதிமுக முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன். இதன் மூலம் பத்தாவது முறையாக அவர் தேர்தலில் களம் இறங்குவது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக, திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிர்வாகியுமான செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஏற்கனவே 9 முறை அந்த தொகுதியில் போட்டியிட்ட அவர் எட்டு முறை வெற்றி பெற்றிருக்கிறார். 1996 இல் மட்டும் அவர் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பத்தாவது முறையாக கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார் செங்கோட்டையன். இது மட்டுமில்லாமல் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், சிடிஆர் நிர்மல் குமார். குப கிருஷ்ணன், சத்தியபாமா, ஜே சி டி பிரபாகர் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளையும் விஜய் அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அக்கட்சியை விட்டு வெளியேறிய செங்கோட்டையன், நடிகர் விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்தார். அவருக்கு, கட்சியின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியும் வழங்கப்பட்டது. தவெகவில் அனுபவமிக்க மூத்த அரசியல்வாதிகள் இணைகின்றனர் என்ற வகையில் அப்போது முக்கியத்துவம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
விஜய்யுடன் டெல்லி பயணித்த அந்த இளைஞர் யார்? போகுமிடமெல்லாம் கூடவே இருந்தாரே.. பின்னணி -
தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையா.. அம்பை தொகுதியில் எதிர்க்கட்சியே இல்லை! மக்கள் டென்ஷன்!












Click it and Unblock the Notifications