ஓரமா போய் விளையாடுங்க.. திண்டுக்கல் சீனிவாசன், ஐபி செந்தில்குமாரை பின்னுக்கு தள்ளிய தவெக வேட்பாளர்!
சென்னை: பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டமன்ற தொகுதியிட்ட அதிமுகவின் திண்டுக்கல் சீனிவாசன் திமுகவின் ஐபி செந்தில் குமாரை விட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் நஜீர் ராஜா முன்னிலையில் இருக்கிறார்.
பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது தமிழக சட்டசபை தேர்தல் களம். பார்த்து பார்த்து வேட்பாளர்களை தேர்வு செய்திருக்கிறது திமுகவும் அதிமுகவும். இதனால் பல தொகுதிகளில் வெற்றியை பெற முட்டி மோதுகின்றனர் வேட்பாளர்கள்.

அந்த வகையில் அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரும், மிக மூத்த சீனியரும், அதிமுகவின் பொருளாளர், அமைப்பு செயலாளர், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் என பல பதவிகளை வகித்து வரும் திண்டுக்கல் சீனிவாசன் மூன்றாவது முறையாக திண்டுக்கல்லில் களம் இறங்கினார்.
அவரை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும் திண்டுக்கல் திமுக மாவட்ட செயலாளர் ஆன ஐபிஎஸ் செந்தில்குமார் களமிறங்கினார். திண்டுக்கல் சீனிவாசனுக்கு இது எட்டாவது தேர்தல் என்பதும், ஐபி செந்தில் குமாருக்கு இது நான்காவது தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.
75 வருட திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி வரலாற்றில் முதன்முறையாக இரு கட்சிகளின் மாவட்ட செயலாளர்களும் நேருக்கு நேர் மோதுகின்றனர். அது மட்டுமல்லாமல் இதுவரையிலான சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இரண்டு முறை மட்டுமே திமுகவும் அதிமுகவும் நேருக்கு நேர் மோதியுள்ளன.
திண்டுக்கல்லை பொறுத்தவரை திண்டுக்கல் சீனிவாசனுக்கும் ஐபி செந்தில்குமாருக்கும் தான் போட்டி என பேசப்பட்ட நிலையில் திடீரென தமிழக வெற்றி கழகம் போட்டிக்குள் குதித்துள்ளது. எல்லாவற்றையும் விட அதிமுக - திமுக வேட்பாளர்களை விட தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் நஜீர் ராஜா முன்னிலையில் இருக்கிறார். இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை படி அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் திமுக வேட்பாளர் ஐபி செந்தில்குமார்-ஐ விட சுமார் 1000 வாக்குகளுக்கு மேல் தவெக வேட்பாளர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications