சி விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கருக்கு தவெகவில் முக்கிய பொறுப்புகள்.. விஜய் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சி. விஜயபாஸ்கர் மற்றும் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு ஒருவழியாக இன்று விஜய் பொறுப்புகளை வழங்கியுள்ளார். அதன்படி, கரூர் மாவட்ட அமைப்பு செயலாளராக எம்.ஆர் விஜயபாஸ்கரை நியமனம் செய்தும், புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலாளராக சி விஜயபாஸ்கரை நியமனம் செய்தும் விஜய் அறிவித்துள்ளார்.

அதிமுகவில் முக்கிய நிர்வாகிகளாக இருந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், மரகதம் குமாரவேல், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 6 எம்.எல்.ஏக்கள் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியம் ஆகினர்.

Vijay assigns key responsibilities to C Vijayabaskar and MR Vijayabaskar

காலம் தாழ்த்தி வந்த விஜய்

அதிமுகவில் புதுக்கோட்டையை தனது கோட்டையாக வைத்து இருந்த சி.விஜயபாஸ்கர், அதேபோல, கரூரில் கோலோச்சிய எம்.ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு தவெகவில் என்ன மாதிரியான பொறுப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் நிலவியது. ஆனால், தவெகவில் சேர்ந்த பிறகு விஜய்யை சந்தித்து ஒருமுறை புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு சரி, அவர்களுக்கு பதவி வழங்குவது பற்றி எந்த அறிவிப்பையும் முதல்வர் விஜய் விடுக்கவில்லை.

ஏற்கனவே தவெகவில் அந்தந்த மாவட்டங்களுக்கு கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர்கள் இருப்பதால் அவர்களின் பதவியினை பறித்து விட்டு கொடுத்தால் கட்சி நிர்வாகிகள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பும் என்பதால், விஜய் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக சொல்லப்பட்டது. இதனால், அதிமுகவில் இருந்து தவெகவுக்கு வந்த நிர்வாகிகள் எப்போது பதவி கிடைக்கும் என காத்திருந்தனர்.

அமைப்பு செயலாளர் பொறுப்புகள்

இந்த சூழலில்தான் ஒருவழியாக அதிமுகவில் இருந்து வந்த மாஜி அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு தவெக தலைவரும் முதல்வருமான விஜய் கட்சி பொறுப்புகளை வழங்கியுள்ளார். இது தொடர்பாக விஜய் கூறியிருப்பதாவது:-

தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே மக்கள் தன்னெழுச்சியாகவும் பெருந்திரளாகவும் தங்களின் ஆதரவை அளித்து வருவதை இந்த நாடே அறியும். தமிழக வெற்றிக் கழகம் மக்களுக்காக எப்பொழுதுமே முதலும் முன்னோடியுமாக இயங்கி வருகிறது. இதனால் அதனுடைய கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகிறது. அந்த வகையில் மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்களாக பின் வருபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

மாவட்ட அமைப்புச் செயலாளர்கள்:

1. சி. விஜய பாஸ்கர் - புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர்

2. எம்.ஆர் விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் & துணைப் பொதுச் செயலாளர்

3. இசக்கி சுப்பையா முன்னாள் அமைச்சர், தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளர்

துணைப் பொதுச் செயலாளர்கள்:

1. மரகதம் குமரவேல்
2. ராஜகோபால்.
3. ஜாகீர் உசேன்.
4. குமார்
5. யுவராஜ்,
6. தினகரன்,
7. மணிகண்டன்
8. மணிகண்டன்
9. அருள்ராஜ்.
10. சாமுவேல் ராஜ்

புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும், பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து இந்தப் புதிய நிர்வாகிகள் பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்கள். இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+