கர்ப்பமாக இருக்கும் தவெக பெண் நிர்வாகி மீது தாக்குதல்.. கண்கள் சிவந்த விஜய்.. திமுக மீது சாடல்
சென்னை: பாரிமுனை பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தவெகவினரை ஆளும் தரப்பினர் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதில் காயமடைந்த கர்ப்பிணிப் பெண் தீவிரச் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்தச் சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலில் திமுக ஈடுபட்டுள்ளதாகவும் இது திமுகவின் தோல்வி பயத்தையே காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டிருந்த தவெகவினரை சிலர் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. அதில் தவெக நிர்வாகிகள் காயமடைந்துள்ளனர். குறிப்பாக நான்கு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் இருந்த நிலையில், அவரும் படுகாயமடைந்துள்ளார். கர்ப்பிணிப் பெண் என்பதால் நிலைமை மோசமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து காயமடைந்த நான்கு மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் அவசரச் சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, தீவிரச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "சென்னை, பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.
இந்தத் தாக்குதலில், நான்கு மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.. அவர்கள் அவசரச் சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, தீவிரச் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் ஆறு பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கட்சியினர், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது. இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்ட ஆளும் கட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம்!
-
“அந்த தகுதி மட்டும் போதுமா?.. ஸ்டாலினுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை?” விஜய் மீது சேரன் தாக்கு! -
பெரம்பூரில் மூடிக் கிடக்கும் விஜய் தேர்தல் அலுவலகம்.. இவ்வளவுதான் தவெக தேர்தல் ஏற்பாடு! -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
தவெகவுடன் பேசியதை சொல்லட்டுமா.. தினகரன் குறித்து புட்டு புட்டு வைத்த முன்னாள் எம்எல்ஏ -
நீட் பயிற்சி மையத்திற்கு ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? அனிதா மரணத்திற்கு ஆறுதல் சொன்னது பொய்யா? -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications