கூட இருந்தவரை ஆனந்த கண்ணீர் விட வைத்த விஜய்! தவெக மேடையில் அரங்கேறிய காட்சிகள்? யாரிந்த சபரிநாதன்?
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய். இந்த நிலையில் விருகம்பாக்கம் தொகுதியின் வேட்பாளராக சபரிநாதன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். சமூக வலைதளங்களில் இது தொடர்பாக கொண்டாடி வருகின்றனர் தவெகவினர். 40 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் உடன் ஓட்டுனராகவும் உதவியாளராகவும் பயணித்து வரும் ராஜேந்திரனின் மகன் தான் சபரிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டமன்ற தேர்தல் களம் உச்சகட்ட வெப்ப நிலைக்கு வந்திருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜயும் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார்.
234 தொகுதிகள் அனைத்திற்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர். கட்சியின் தலைவரான விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதுமட்டுமில்லாமல் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸொ ஆனந்த் தியாகராய நகர் தொகுதியிலும், வெங்கட்ராமன் மயிலாப்பூர் தொகுதியிலும், ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியிலும் ,செங்கோட்டையன் கோபி தொகுதியிலும் போட்டிருக்கிறார்.
இது மட்டுமல்லாமல் சென்னையின் அனைத்து தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார் விஜய். இதில் அதிகமாக கவனம் பெற்று இருப்பவர் விருகம்பாக்கம் தொகுதியின் வேட்பாளரான சபரிநாதன். 21 வயதிலேயே விஜய் மக்கள் இயக்கத்தில் இணைந்த அவர் 6 ஆண்டுகளாக மக்கள் இயக்க பணிகளை செய்து வந்தார். இந்த சூழலில் தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்ததும் அந்த கட்சியில் இணைந்த சபரிநாதனுக்கு தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பதவியை வழங்கியிருந்தார் விஜய்.
அதற்கு பிறகு தனது முதல் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றிருக்கிறார், உண்மையை சொல்லப்போனால் விஜய்க்கு மிக நெருக்கமானவர் சபரிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. 40 ஆண்டுகளுக்கு மேலாக விஜயின் ஓட்டுனராக இருந்து நம்பிக்கை கூறிய உதவியாளராக உயர்ந்த ராஜேந்திரனின் மகன் தான் சபரிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அங்கு ராஜேந்திரன் இருப்பார்.
தனி விமானத்துக்கு விஜய் சென்றாலும் அதில் நிச்சயம் ராஜேந்திரன் செல்வார். விஜயின் ஓட்டுனராக காரின் முன்னிருக்கியில் அமர்ந்தவர் தற்போது உதவியாளராக இடது பக்க இருக்கையில் அமர்ந்து செல்வது வழக்கம். எப்போதும் ராஜேந்திரனை அண்ணன் என்று தான் விஜய் அழைப்பார். அவரது மகளின் திருமணத்தில் கூட விஜய் கலந்து கொண்டிருக்கிறார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை விஜய் சந்தித்தபோது உடன் சென்றவர் ராஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
விருகம்பாக்கம் தொகுதியின் தவெக வேட்பாளராக சபரிநாதன் அறிவிக்கப்பட்டார்.
— Sathish ✨💫 (@S_A_T_H_I_S_H_S) March 29, 2026
சபரிநாதனின் தந்தை ராஜேந்திரன், விஜய்யிடம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர்.#TVKVijay #TVK pic.twitter.com/Hh0Xr3YTHn
இந்த நிலையில் தான் 2026 சட்டமன்ற தேர்தலில் சபரிநாதன் விருகம்பாக்கம் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் மேடைக்குச் சென்ற சபரிநாதன் விஜயின் காலில் விழுந்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். அப்போது ராஜேந்திரனும் விஜய்க்கு அருகே நின்று கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். தற்போது அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் தமிழக வெற்றி கழகத்தினர் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
-
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்: வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணம் -
திமுகனாலும்.. தவெகனாலும்.. சீட்டுகளை அள்ளும் மாஜி அதிமுக தலைகள்! விஜய் லிஸ்ட்டில் யார் யார் பாருங்க! -
TVK candidate list: தவெக வேட்பாளர் பட்டியல்! கோபியில் ’சீனியர்’ செங்கோட்டையன்! 10வது முறையாக களம் காண்கிறார்! -
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட் -
ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு சீட் கொடுத்த எடப்பாடி.. சென்னை திருவிக நகர் தொகுதியில் போட்டி -
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
“ரெஸ்ட்டா? எனக்கா?” 13வது முறையாக தேர்தலில் களமிறங்கும் துரைமுருகன்.. மீண்டும் காட்பாடியில் போட்டி! -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்.. ஏப்.6 ஆம் தேதி வெளியாகும் புதிய வாக்காளர் பட்டியல்! -
170... திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக! லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு














Click it and Unblock the Notifications