கருப்பு டீ சர்ட் அணிந்து.. முதல் ஆர்ப்பாட்டத்தில் அதிரவிட்ட விஜய்.. தவெக மேடையில் அரங்கேறிய சம்பவம்!
சென்னை: திருப்புவனம் அஜித் குமார் மரணத்திற்கு நீதி வேண்டி நடந்து வரும் தவெக ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கருப்பு டீ சர்ட் அணிந்து பங்கேற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் தவெக ஆர்ப்பாட்ட மேடையில் லாக்-அப் மரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அழைத்து வரப்பட்டிருக்கின்றனர்.
கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியது முதலே விஜய் வெள்ளை சட்டை மற்றும் சந்தன நிற பேண்ட் அணிந்தே கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். பனையூரில் நடந்த கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்திலும் கூட விஜய் அரசியல்வாதிக்கான லுக்கிலேயே இருந்தார்.

தவெக ஆர்ப்பாட்டம்
இதனை ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை பின்பற்றி விஜய் செய்வதாக கிண்டல் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு தவெக சார்பாக சென்னையில் உள்ள சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் விஜய்
அரசியலுக்கு வந்தபின் விஜய் பங்கேற்கும் முதல் ஆர்ப்பாட்டம் இதுதான். இதனால் ஆயிரக்கணக்கான தவெகவினர் சிவானந்தா சாலையில் குவிந்தனர். ஆர்ப்பாட்டம் 10 மணிக்கு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தவெக தலைவர் விஜய் காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்த மேடைக்கு வந்தார்.
கருப்பு டீ சர்டில் விஜய்
கருப்பு டீ சர்ட் அணிந்து கைகளில் சாரி வேண்டாம்.. நீதி வேண்டும் என்ற பதாகைகளை வைத்திருந்தார். முதல்முறையாக விஜய் கருப்பு டீ சர்ட் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் தவெக ஆர்ப்பாட்ட மேடையில் லாக் அப் மரணத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு குடும்பங்களையும் மேடை ஏற்றி இருக்கின்றனர்.
சாரி'மா மாடல் ஆட்சி
இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய் பேசுகையில், அஜித் குமார் குடும்பத்தினரிடம் சாரி கேட்டதை போல், லாக் அப் மரணத்தால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களிடமும் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும். அனைத்து விஷயங்களிலும் முதல்வரிடம் இருக்கும் ஒரே பதில் சாரி மட்டும்தான். திமுகவின் விளம்பர மாடல் ஆட்சி, இப்போது சாரி'மா மாடல் ஆட்சியாக மாறிவிட்டது என்றும் விமர்சித்துள்ளார்.
-
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
வரலாறு தெரியாம தப்பு தப்பா பேசாதீங்க.. மருத்துவ படிப்பு விவகாரம்.. உதயநிதிக்கு அருண்ராஜ் பதில் -
“திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள்.. யாரும் தப்பிக்க முடியாது”.. அமைச்சர் CTR நிர்மல்குமார் உறுதி! -
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.. விடிவுகாலம் எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications