ஸ்டார்ட் பண்ணுங்க.. உளவுத்துறையை களமிறக்கிய விஜய்.. தமிழ்நாடு முழுக்க முக்கிய ஆபரேஷன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை வேரோடு களையெடுக்கும், தமிழக வெற்றி கழகஅரசு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அரசு அலுவலகங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கவும், லஞ்சப் பிடியில் இருந்து மக்களை மீட்கவும் விஜய் தலைமையிலான அரசு உளவுத்துறையை நேரடியாகக் களமிறக்கியுள்ளது.

vijay tvk

ஏற்கனவே வாட்ஸ்அப் எண் அறிமுகம்

அரசுச் சேவைகளைப் பெற பொதுமக்கள் யாருக்கும் லஞ்சமோ அல்லது கட்சி நிதியோ கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று முதலமைச்சர் விஜய் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் உடனடியாகப் புகாரளிக்க பிரத்யேக வாட்ஸ்அப் எண் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு சாதாரண மெசேஜ் அனுப்பினாலே போதும், உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இந்த அறிவிப்பு அரசுத் துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக, பல அலுவலகங்களில் லஞ்சப் பழக்கம் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிகிறது. கட்சி நிதி என்ற பெயரில் பணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் நேரடியாகக் கெடுபிடி செய்வதைத் தவிர்த்து, மக்கள் தாமாக முன்வந்து கொடுத்தால் மட்டுமே வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தொடரும் அழுத்தங்கள்

அதேவேளையில், கடந்த ஆட்சி காலங்களில் பெரிய தொகையைக் கொடுத்துப் பணியிட மாற்றங்களையும் பதவிகளையும் பெற்ற உயர் அதிகாரிகள், தங்களின் அன்றைய செலவினங்களை ஈடுகட்டத் துடிக்கின்றனர். இதற்காகத் கீழ்நிலை ஊழியர்களை லஞ்சம் வாங்குமாறு கட்டாயப்படுத்தி வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு பிற பகுதிகளில் இருந்து பணிமாறுதலில் வந்துள்ள வருவாய்த்துறை அதிகாரிகள், வரி வசூலிப்பாளர்களுக்கு குறிப்பிட்ட இலக்கு நிர்ணயித்து வசூல் வேட்டையில் ஈடுபடுமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மேலதிகாரிகளின் இந்தக் கெடுபிடிகளைத் தாங்க முடியாத கீழ்நிலை ஊழியர்கள், வேறு பிரிவுகளுக்குப் இடமாறுதல் பெற தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

முக்கியமாக நகராட்சி அமைப்புகளில் எல்லைமீறிய லஞ்ச நடமாட்டம் தொடர்கிறது. இங்குள்ள அதிகாரிகள் ரொக்கமாகப் பணம் வாங்குவதற்குப் பதிலாக, சோதனைகளில் சிக்காமல் இருக்ககூப்பன்களாக லஞ்சத்தைப் பெறும் புதிய உத்தியைக் கையாண்டு வருகின்றனர். அதாவது லஞ்சத்திற்கு பதிலாக கூப்பன் தர வேண்டும்.. அதை வைத்து நகை கடைகளில் நகை வாங்கிக்கொள்வார்கள்.

இதுமட்டுமன்றி, பத்திரப்பதிவுத் துறை, மின்சார வாரியம் , வருவாய்த்துறை & நில அளவைத் துறை, மாநகராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் , ஆகியவற்றில் இன்னும் லஞ்ச கலாச்சாரம் முற்றிலுமாக ஒழியவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. முதலமைச்சர் அறிவித்த வாட்ஸ்அப் எண்ணிற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

உளவுத்துறை ரிப்போர்ட்: வட்டமிடும் நடவடிக்கை!

இதனைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு உளவுத்துறைக்கு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்படி: வருவாய் கோட்டாட்சியர் (RDO), ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (RTO), பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றில் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளின் பட்டியலைத் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரே இடத்தில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி, லஞ்ச சிஸ்டமை உருவாக்கியுள்ள அதிகாரிகளின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

உளவுத்துறை சமர்ப்பிக்கும் ரகசிய அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கைகளோ அல்லது உடனடி இடமாறுதல்களோ பாயக்கூடும் என்பதால் அரசு அதிகாரிகள் கடும் பீதியில் உறைந்துபோயுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+