யாரு சாமி நீ? Axis My India எக்ஸிட் போல் கணிப்புகளுக்கு, India Today சாயம் பூசிய TVK!
சென்னை: நேற்று 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருந்தன. அதில் தமிழகத்தில் திமுக தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என்று பல நிறுவனங்களும் கூறியிருக்க, Axis My India மட்டும் விஜய்க்கு 120 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று கணிப்பை வெளியிட்டிருந்தது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 118 தொகுதிகளில் வெற்றி பெறுபவர்கள் ஆட்சியை பிடிக்க முடியும். அந்த வகையில் பல்வேறு நிறுவனங்களும் திமுகதான் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் என்று கூறியிருந்தன.

PEOPLES PULSE
திமுக 125-145
அதிமுக 65-80
தவெக 18-24
நாதக 0-0
மற்றவை 2-6
NEWS 18
திமுக 125-145
அதிமுக 65-80
தவெக 13-18
நாதக 5-8
மற்றவை 2-6
TODAYS CHANAKYA
திமுக 145-160
அதிமுக 50-65
தவெக 13-18
நாதக 5-8
மற்றவை 0-0
MATRIZE
திமுக 122-132
அதிமுக 87-100
தவெக 12-16
நாதக 1-6
மற்றவை 0-0
P-MARQ
திமுக 125-145
அதிமுக 65-85
தவெக 16-26
நாதக 1-6
மற்றவை 0-0
மாறுபட்ட கணிப்புகள்
என கணிப்பை வெளியிட்டிருந்தன. இப்படியான கணிப்புகளை வெளியிட்ட நிறுவனங்களில் 2 நிறுவனங்கள் மட்டுமே வேறு மாதிரியாக முடிவுகளை வெளியிட்டிருந்தன.
1. JVC
2. Axis My India
JVC கணிப்பின்படி அதிமுக 128-147 இடங்களை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, Axis My India கணிப்பில், விஜய்யின் தவெக 98-120 தொகுதிகளில் வெல்லும் என்று சொல்லப்பட்டிருந்தது. திமுக 92-110 இடங்களிலும், அதிமுக 22-32 இடங்களிலும் வெல்வார் என்று சொல்லப்பட்டிருந்தது.
Thank you but let me highlight that this survey isn’t India Today’s or mine, but Axis My India numbers! Over to May 4!!! https://t.co/EGBaYiqQp8
— Akshita Nandagopal (@Akshita_N) April 29, 2026
முதலமைச்சராக விஜய்
இதை பார்த்த விஜய் ரசிகர்கள் குஷியாகினர். விஜய் முதலமைச்சராகிவிடுவார் என்று சோஷியல் மீடியாக்களில் தங்கள் அபிப்ராயங்களை பகிர்ந்துக்கொண்டனர். இன்னும் சிலர், ஏன் Axis My India கணிப்பு நம்பகமானது என்று ரைட்டப் எழுத தொடங்கினர்.
அதில், தேர்தல் தொடங்கியது முதல் NDTV, Times Now, Republic TV இப்படியான சேனல்கள் ஏதும் களத்திற்கு வரவில்லை என்றும், India Today மட்டும் முதல் நாள் தொடங்கி, கடைசி வரை மக்களுடன் நின்றது எனவும் பாராட்டியிருந்தனர். மட்டுமல்லாது, India Today செய்தியாளர் அக்ஷிதா பெயரை குறிப்பிட்டு பாராட்டியிருந்தார்கள்.
Axis My India-India Today கணிப்புகள்
ஸ்டூடியோவில் இருந்து புள்ளிவிவரங்களை அலசி ஆராய்ந்து சொல்வதற்கும், களத்தில் இறங்கி தகவல்களை சேமித்து சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்று கூறியிருக்கின்றனர். எனவேதான் Axis My India-India Today கணிப்புகளை தான் நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எல்லாம் ஓகேதான், ஆனால் கடைசியில் ஏன் Axis My India கணிப்பை ஏன் India Today உடன் இணைத்தார்கள் என்று தெரியவில்லை. எக்ஸிட் போல் கணிப்பு நடத்தியது முழுக்க Axis My India மட்டுமே. அதை வெளியிட்டது India Today. எனவே, தவெகவினர் குறிப்பிட்டிருந்த செய்தியாளர் அக்ஷிதா, தவெகவினரின் ட்வீட்டுக்கு,
"என்னை பாராட்டியதற்கு நன்றி. ஆனால், ஒன்றை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த எக்ஸிட் போல் முடிவுகள் 'இந்தியா டுடே'யினதோ அல்லது என்னுடையதோ அல்ல - இவை 'Axis My India'வின் தரவுகள்!" என்று விளக்கமளித்துள்ளார். இவரது பதில் தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
அவசரப்பட்டு Axis My India எக்ஸிட் போல் கணிப்புகளுக்கு, India Today சாயம் பூசிட்டியே குமாரு! என பலரும் கலாய்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications