தவெக மாநாட்டுக்குப் போறீங்களா.. ஆன்லைனில் இதை எடுக்க மறந்திடாதீங்க
சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அந்தக்கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் மாநாட்டுக்கு வரும் வாகனங்கள், பார்க்கிங் செய்வதற்கு முன்கூட்டியே ஆன்லைனில் பாஸ் எடுப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜயின் திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகளுக்கு அவரின் ரசிகர்களிடைய எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும். அ. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் தான் அவரின் கடைசி படம் எனறு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி அரசியலில் இறங்கிவிட்டார்.

இதையடுத்து முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார். கடந்த சில மாதம் கட்சியின் கொடி, பாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் வருகிற 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் அந்த கட்சி நடத்தவுள்ள முதல் மாநாட்டுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த வாரம் சேலத்தில் அக்கட்சியினருக்கு அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது. மாநாட்டுக்கான ஆயத்தப் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. மாநாட்டை நடத்துவதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தவெக தலைவர் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில், அரசியலை வெற்றி தோல்வியை மட்டுமே அடிப்படையாக கொண்டு அளவிடாமல் ஆழமான அக உணர்வாகவும், கொள்கை கொண்டாட்டமாகவும் அணுக போகும் நம்முடைய அந்த தருணங்கள் மாநாட்டில் மேலும் அழகுற அமையட்டும். மாநாட்டுக்கு வரும்போது, பாதுகாப்புடன் சாலை விதிகளை கடைபிடித்து வருவது அவசியம்.
எல்லோரையும் போலவே கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர் சிறுமியர், முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நம் மாநாட்டுக்கு வரத் திட்டமிட்டு இருப்பர். உங்கள் எல்லோருடனும் அவர்களையும் மாநாட்டில் காண வேண்டும் என்ற ஆவல்தான் எனக்கும் இருக்கிறது. ஆனால். எல்லாவற்றையும்விட அவர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம்.
மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூரப் பயணம், அவர்களுக்கு உடல்ரீதியாகச் சிரமத்தை ஏற்படுத்தக் கூடும். அதனால், அவர்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக, தங்கள் வீடுகளில் இருந்தே நமது வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என்றும் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல, பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும் நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். நாம் எதைச் செய்தாலும், அதில் பொறுப்புணர்வுடன் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டையும் காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல்பட்டால் தான் நம் செயல்கள் மிக நேர்த்தியாக அமையும். அரசியலுக்கும் அது பொருந்தும். எந்நாளும் இதை ஒரு கட்டுப்பாட்டு விதியாகவே கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என்று கூறியிருந்தார்.
மாநாட்டில் வரும் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு சுமார் 80 ஏக்கர் நிலப்பரப்பளவில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 2,000 வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாநாட்டின் இடது புறம் 40 ஏக்கரிலும், வலது புறம் 40 ஏக்கரிலும் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கும் 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்க வரும் வாகனங்கள் ஆன்லைனில் பாஸ் பெற வேண்டும் என்றும் தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் பாஸ் பெறும் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆன்லைனில் பாஸ் வாங்கிய வாகனங்கள் மட்டுமே பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்படும். பாஸ் இல்லாத வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
-
சிபிஐயிடம் வசமாக சிக்கிய விஜய்? பிரசார வாகனம் 20 மீட்டர் தள்ளிப்போனது ஏன்? கரூர் நெரிசலில் ட்விஸ்ட் -
பாஜக கூட்டணிக்கு நோ சொன்ன தவெக.. சில நிமிடங்களில் வெளியான கரூர் ட்ரோன் காட்சி.. வசமாக மாட்டிய விஜய் -
நக்கீரன் கோபால் அப்பவே சொன்னாரே.. கரூரில் நடந்தது உண்மையில் என்ன? ட்ரோன் காட்சிகள் உண்மையா? -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
பெரம்பூரில் விஜய் போட்டியிட விரும்புவதன் பின்னணி? திமுகவை அசரடிக்கும் செல்வாக்கு உள்ளதா? -
கரூரில் 'ஜனநாயகன்' ஷூட்டிங்?.. சிபிஐ அடுத்த ஆக்சன் என்ன? மாரிதாஸ் வைத்த பாயிண்ட்.. கவனிச்சீங்களா? -
வட தமிழகத்தில் திமுகவுக்கு சிக்கல்? வன்னியர்கள் ஓட்டு மொத்தமா காலி? வேல்முருகன் முடிவால் நெருக்கடி! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தவாக.. கூடுதல் சீட் தராததால் வேல்முருகன் அதிரடி முடிவு! -
கோலாட்டம் ஆடிய மாணவியின் வாயில் ’விசில்’.. அத்தனை பேர் முன்னிலையில் தேர்தல் அதிகாரி செய்த செயல்! -
அந்த கூட்டணி, இந்த கூட்டணிலாம் கிடையாது! ஆல் ஏரியாவுலயும் நாம்தான் கில்லி! இஃப்தார் நோன்பில் விஜய்! -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய்












Click it and Unblock the Notifications