தவெக - காங்கிரஸ் கூட்டணி அமைந்தது.. சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் உற்சாக கொண்டாட்டம்
சென்னை: விஜய்யின் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டதும் சத்திய மூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இனிப்புகள் வழங்கியும், ஆட்டம் பாட்டம் என சத்தியமூர்த்தி பவனில் உற்சாகம் களை கட்டியது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிபெரும் கட்சியாக விஜய்யின் தவெக வென்றுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 பேர் தேவை என்பதால், விஜய்க்கு இந்த எண்ணிக்கை இல்லை.

இதனால், கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு விஜய் தள்ளப்பட்டார். விஜய்க்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இன்னும் 11 எம்.எல்.ஏக்கள் தேவை என்ற நிலை இருக்கும் நிலையில், எதிர்பார்த்தபடியே காங்கிரஸ் கட்சி முதல் ஆளாக தனது ஆதரவை விஜய்க்கு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியிடம் 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
ஆட்சியிலும் காங்கிரஸ் கட்சி பங்கு பெறும் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க இருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டதும் சத்திய மூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இனிப்புகள் வழங்கியும் ஆட்டம் பாட்டம் என சத்தியமூர்த்தி பவனில் உற்சாகம் களை கட்டியது.
விஜய் ஏற்கனவே எங்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூறியிருந்தார். தற்போது விஜய் ஆட்சி அமைக்க 11 வேட்பாளர்கள் ஆதரவு தேவைப்படுவதால் விஜய் காங்கிரசுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். இதன்படி காங்கிரஸ் தலைமையும் விஜய்யுடன் கூட்டணி வைக்க சம்மதம் தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகளாக திமுகவுடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் தற்போது உறவை முறித்துள்ளது.
விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளதால் ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ்க்கு பங்கு கிடைக்கும். இதனால் 60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 5 பேருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர் கிரிஸஷ் சோடங்கர் உள்ளிடோர் தவெக தலைமை அலுவலகம் சென்று விஜய்யை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். விஜய்யும் காங்கிரஸ் கட்சி துண்டை தன் தோளில் அணிந்து இருந்தார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக? -
விஜய்யுடன் டெல்லி பயணித்த அந்த இளைஞர் யார்? போகுமிடமெல்லாம் கூடவே இருந்தாரே.. பின்னணி -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தப்பு செஞ்சா அடுத்த செகண்டே பதவி காலி.. பனையூர் தவெக ஆபீஸில் அமைச்சர் ஆனந்த் கொடுத்த அதிரடி ஷாக் -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
அரசு மருத்துவமனையில் தந்தையை அனுமதித்து இரவு முழுவதும் தங்கிய அமைச்சர் மதன் ராஜாவுக்குப் பாராட்டு -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை?












Click it and Unblock the Notifications