தவெக - காங்கிரஸ் கூட்டணியா? மாணிக்கம் தாகூர் சொன்ன பதில்.. திமுக மீதும் மறைமுக அட்டாக்
சென்னை: தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த மாணிக்கம் தாகூர், "தமிழ்நாட்டில் நன்மைக்காக பார்க்க வேண்டும். கூட்டணி என்பது தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது. 2026 தேர்தல் முடிவு பெற்றுவிட்டது. அரசியல் விவகார குழு முடிவெடுத்து இருக்கிறது. அந்த முடிவை கிரிஷ் சோடங்கர் அறிவிப்பார்" என்று கூறினார்.
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- மதவாத சக்திகள், வெறுப்பு அரசியலுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை. திருப்பரங்குன்றத்தில் ராஜன் செல்லப்பா தீபம் ஏற்றுவோம் என்று வாக்கு கேட்டார்.. அவருக்கு மக்கள் மூன்றாம் இடம் கொடுத்து இருக்கிறார்கள்.

மதவாதத்திற்கு விலை போனதால் அவரை மக்கள் நிராகரித்து இருக்கிறார்கள். தவெக தலைவர் விஜய் பாஜகவிற்கு எதிராக நின்று வெற்றி பெற்று இருக்கிறார். மதவாதத்தை ஆதரிப்போம் என்று சொன்னவர்களை தவெக தோற்கடித்து இருக்கிறது. இதெல்லாம் தேர்தல் முடிவில் வெளிவந்த உண்மை.
திமுக நிர்வாகி சரவணன் பத்திரிகையில் எதுவென்றாலும் பேசலாம். எங்களை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி நிலை என்பதை அரசியல் விவகார குழு முடிவெடுத்து இருக்கிறது. அந்த முடிவை அகில இந்திய பொதுச்செயலாளர் அறிவிப்பார். எங்களை பொறுத்தவரை அவர்கள் புலம்பலில் இருக்கிறார்கள். எங்களை பொறுத்தவரை பாஜக தமிழகத்தில் வரக்கூடாது, ஆர்.எஸ்.எஸ் வரக்கூடாது.
அதற்காக சண்டை போடுகிறோம். இதை புரியாமல் செய்கிறார்கள். பாஜகவை எப்படியாவது வர விட்றனும் என நினைக்கிறார்கள். தனக்கு கிடைக்கலன்னா தட்டி விட்றனும் என்கிற பழக்கம்தான் இது. வன்மத்தின் உச்சம் இது. தமிழ்நாட்டில் நன்மைக்காக பார்க்க வேண்டும். கூட்டணி என்பது தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது. 2026 தேர்தல் முடிவு பெற்றுவிட்டது.
அரசியல் விவகார குழு முடிவெடுத்து இருக்கிறது. அந்த முடிவை கிரிஷ் சோடங்கர் அறிவிப்பார். தவெகவிடம் ஆட்சியில் பங்கு கேட்பீர்களா என்று கேட்கிறீர்கள்.. இதெல்லாம் பிள்ளை பிறக்கும் முன் பெயர் வைப்பது மாதிரி.. அதனால் நடக்கட்டும்.. தமிழக வாக்காளர்கள் தெளிவாக முடிவு எடுத்து வருகிறார்கள். சிலர் சொல்லிட்டு இருந்தார்கள் தமிழக மண்ணுக்கு ஆட்சியில் பங்கு ஒத்துவராது என்று.. மக்கள் அதற்கு பதில் சொல்லிவிட்டார்கள்.
தமிழக மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். அதிமுகவுடன் பேசுகிறார்களா என்று எனக்கு தெரியாது. தமிழக வெற்றிக் கழகமும் திராவிட சித்தாந்தம்தான் பேசுகிறது. கலைஞர், எம்.ஜி.ஆர் பேசிய அரசியலைத்தான் விஜய்யும் பேசுகிறார். தமிழ்நாட்டு மண் வெறுப்பு அரசியலுக்கு எதிரானது" என்று கூறினார்.
-
விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்! -
திமுக எதிர்த்த VB-GRAM திட்டத்தை.. அமல்படுத்தும் விஜய் அரசு! தமிழகத்துக்கு ₹5,000 கோடி கூடுதல் சுமை -
ஸ்ரீவைகுண்டம் கொடூரம்: “யார் அந்த மேலிடம்? முதல்வரை தாண்டிய பவர் சென்டரா?" விஜய்க்கு எடப்பாடி கேள்வி -
தமிழக பள்ளிக்குள் சாதி, மத அடையாளங்களுக்கு இடமில்லை.. நேரடியாகவே சொன்ன அமைச்சர் ராஜ்மோகன்! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்?











Click it and Unblock the Notifications