தலை கீழ நின்னு தண்ணீர் குடிச்சாலும்! தவெகவினர் நம்புறது நடக்காதாமே! விஜய் மட்டும்தான் விசில் ஊதணுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தவெகவுடன் காங்கிரஸ் கட்சி (TVK Congress) கூட்டணிக்கு வரும் என இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் அது நடக்கவே நடக்காது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். விஜய் தனித்து போட்டியிடுவதோ அல்லது அதிமுக கூட்டணிக்கு செல்வதையோ தவிர வேறு ஆப்ஷன் இல்லை என்கிறார்கள்.

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்க நெருங்க, கோஷ்டிகளுக்கு பஞ்சமில்லாத காங்கிரஸ் கட்சி அன்றாடம் ஒரு பிரச்சினையை தலைமைக்கும் கூட்டணி தலைமைக்கும் கொடுத்து வருகிறது என்றே சொல்லலாம்.

TVK Congress

விஜய் தனது விருத்தாசலம் மாநாட்டில் எப்போது ஆட்சியில் பங்கு என்பதை அறிவித்தாரோ, அப்போது முதலே காங்கிரஸில் பல்வேறு பிரச்சினைகள் எழத் தொடங்கிவிட்டன. அது முதல் காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி செல்ல விருப்பமாக உள்ளனர். ஆனால் சீனியர் நிர்வாகிகளோ திமுகவுடன்தான் கூட்டணி என கூறி வருகிறார்கள்.

மாணிக்கம் தாகூர்

இந்த நிலையில்தான் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், அதிகாரப் பகிர்வு குறித்து தொடர்ந்து பதிவுகளை போட்டு வருகிறார்கள். அவரை ஒரு முறை திமுக முன்னாள் எம்பி அப்துல்லா கூட கண்டித்திருந்தார்.

ஆனாலும் கேரளாவில் காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுத்து முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளது என அவர் தொடர்ந்து பல்வேறு பதிவுகளை போட்டு வருகிறார்.

காங்கிரஸ் கட்சி

அது போல் காங்கிரஸ் கட்சியின் வியூக வகுப்பாளரும், ராகுலுக்கு நெருக்கமானவருமான பிரவீன் சக்கரவர்த்தியும் விஜய்யை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் தமிழக அரசை உத்தரப்பிரதேசத்துடன் ஒப்பிட்டு விமர்சித்திருந்தார்.

அது போல் நேற்றைய தினம் விஜய் கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் "தமிழக தேர்தலில் விசில் ஊதப்பட்டுவிட்டது" என ட்வீட் செய்திருக்கிறார். அதுபோல் கட்சியின் மூத்த நிர்வாகியான திருச்சி வேலுசாமியும் தவெகவுடன் கூட்டணி, அதிகாரப் பகிர்வு என்பது போல் பேசி வருகிறார்.

திமுக தலைமை

இவ்வாறு இவர்கள் பேசுவது அங்கு திமுக தலைமைக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் கூட்டணி நல்லுறவிலும் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதனால்தான் கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியிருந்தார்.

ஆனாலும் அதையெல்லாம் மீறி சிலர் சமூகவலைதள பக்கத்தில் தொடர்ந்து தவெக கூட்டணி குறித்தே பேசி வந்தனர். இந்த நிலையில்தான் டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

எச்சரிக்கை

இந்த கூட்டத்தில் வைத்து இனியும் கூட்டணி குறித்து யாரும் பேசக் கூடாது என நிர்வாகிகளுக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் செங்கோட்டையனோ தவெகவுடன் கூட்டணி அமைக்க ஒரு சில நிர்வாகிகளுக்கு விருப்பம் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது தவெக- காங்கிரஸ் கூட்டணி குறித்த பேச்சுகள் எழுந்துள்ளன. செங்கோட்டையன் மூத்த தலைவர் என்பதால் அவர் சொன்னது போல் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என தவெக தொண்டர்களும் விஜய் ஆதரவாளர்களும் இன்னும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

தவெக- காங்கிரஸ்

ஆனால் உண்மை என்னவெனில் தவெக- காங்கிரஸ் இடையே கூட்டணி அமையும் என்பது நடக்காத ஒன்று என்கிறார்கள். காரணம் காங்கிரஸ் கட்சியில் ஒரு சிலர் தவெகவுடன் கூட்டணி செல்ல விரும்பினாலும் மூத்த நிர்வாகிகளும் அவ்வாறு தவெகவுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம் என கூறியிருந்ததால் கட்சி தலைமையும் திமுக கூட்டணியை விட்டுச் செல்லக் கூடாது என கருதுகிறது.

2 ஆப்ஷன்தான்

எனவே விஜய் முன்பு இருக்கும் ஆப்ஷன் இரண்டுதான், ஒன்று விஜய் தனித்து போட்டியிடுவது, இல்லாவிட்டால் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைவதுதான். ஆனால் விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்கிற பட்சத்தில் அக்கட்சி அதிமுக கூட்டணியில் இணைவது சாத்தியமில்லை. எனவே விஜய் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவார் என்றே தெரிகிறது. அவரது கட்சி நிர்வாகிகளும் தொடர்ந்து 234, 234 என்றே கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போ விஜய் கூட்டணியில் இல்லாமல் போட்டியிட்டு தனியாக விசில் அடிச்சிக்கணும் போலயே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+