Congress MLAs: தவெகவுடன் கூட்டணி.. காங்கிரஸ் 5 எம்எல்ஏக்கள் யார் யார்? எந்த தொகுதியில் வெற்றி பெற்றனர்?
சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதனால் 10 ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிந்துள்ளது. விஜய்க்கு ஆதரவு அளித்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் யார் யார் வெற்றி பெற்றுள்ளனர், எந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர் என்ற விவரத்தை இங்கு காணலாம்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் போட்டியிட்டது. மொத்தம் 28 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. இதில் 5 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. அந்த 5 தொகுதிகள் விவரம்:-

காங்கிரஸ் 5 எம்.எல்.ஏக்கள்
* குளச்சல் - தாரகை கத்பர்ட்
* மதுரை மேலூர் - விஸ்வநாதன்
* மயிலாடுதுறை - ஜமால் முகமது
* விளவங்கோடு - பிரவீன்
* கிள்ளியூர் - ராஜேஷ்குமார்
சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதே நேரம் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்று இருப்பதால் ஆட்சி அமைக்க இன்னும் அந்த கட்சிக்கு 11 வேட்பாளர்களின் ஆதரவு தேவைப்பட்டது. இதனால் தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு தவெக காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தது.
காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்
இதனை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் தமிழகத்தில் நிலையான ஆட்சியை வழங்க தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் தவெகவுடன் இணைந்து களம் காண காங்கிரஸ் முடிவு செய்து இருக்கிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற வாக்கு வங்கிகளை ஒருங்கிணைக்க இரு கட்சிகளும் திட்டமிட்டு இந்த முடிவை எடுத்துள்ளது.
2029 லோக்சபா தேர்தலின்போதும் தவெகவுடன் கூட்டணி அமைப்பதோடு, ராஜ்யசபா தேர்தல்களிலும் தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என காங்கிரஸ் கூறியுள்ளது. இதனால் தவெக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கார்த்தி சிதம்பரம் பேச்சு
விஜய்யின் ஆட்சி என்பது மக்களின் முடிவு.. மக்களின் முடிவை ஆதரித்து நாங்கள் தவெகவுடன் கூட்டணிக்கு செல்கிறோம். தேர்தலுக்கு பிந்தையக் கூட்டணி என்பது வழக்கமான ஒன்று தான். விஜய் அழைத்ததால் அவரை மதித்து நாங்கள் செல்கிறோம் என்று கார்த்தி சிதம்பரம் கூறியிருந்தார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
குறை பிரசவத்தில் தவெக வெற்றி.. ஆட்சி நீடிக்காது.. திமுக சிவசங்கர் கணிப்பு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு












Click it and Unblock the Notifications