Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புற்றுநோய்க்கு ஜோதிடம்தான் தீர்வு! அரிய கருத்தை சொன்னவருக்கு சீட் கொடுத்த விஜய்! சரியா போச்சு போங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் கடந்த 2024-2025ம் ஆண்டில் மட்டும் சுமார் 15.6 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சராசரி உயிரிழப்பு ஆண்டுக்கு 8-9 லட்சமாக இருக்கிறது என உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. இப்படி இருக்கையில் புற்றுநோய்க்கு ஜோதிடம் மூலம் தீர்வு காணலாம் என தவறாக வழிநடத்தும் நபரை விஜய் வேட்பாளராக அறிவித்திருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

அதேபோல மறுபுறம், திமுக தனது தேர்தல் வாக்குறுதியில், 11 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் உருவாக்கப்படும் என்று தெரிவித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

Vijay TVK Tamil Nadu assembly election 2026

அச்சுறுத்தும் புற்றுநோய்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் உலக சுகாதார மையம் இணைந்து, இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகின்றன என்பது குறித்து அதிர்ச்சி தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. புற்றுநோய் பாதிப்பை தாமதமாக அறிந்துக்கொள்வதுதான், உயிரிழப்பு மிக முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. பாதிப்பை தெரிந்துக்கொள்ள வேண்டும் எனில், மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

அல்லது ஏற்கெனவே இருக்கும் மருத்துவமனைகளில், புற்றுநோய் பாதிப்பை கண்டறியும் சிறப்பு தொழில்நுட்பங்களை கொண்டுவர வேண்டும். அதைத்தான் திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக அளித்திருக்கிறது. இது புற்றுநோய் அச்சத்தை பெரிய அளவுக்கு கட்டுப்படுத்தும். மட்டுமல்லாது ஏற்கெனவே பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பூசியை அரசு விநியோகிக்க தொடங்கிவிட்டது.

தவெகவின் நகர்வு

இப்படி இருக்கையில், மறுபுறம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இந்த விஷயத்தை எப்படி அணுகியிருக்கிறார் என்பதற்கு உதாரணமாக அவரது வேட்பாளர் தேர்வு இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அதாவது, கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளராக அக்கட்சியின் நிர்வாகி ஆர்.டி.கனிமொழி சந்தோஷை விஜய் அறிவித்திருக்கிறார்.

புற்றுநோயும் ஜோதிடமும்

கனிமொழி சந்தோஷ், சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில், கேன்சர் நோயாளிகள் குறித்து பேசியிருந்தார். அதாவது, "கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போது சர்ஜரி செய்யலாம்? சர்ஜரி செய்யலாமா? வேண்டாமா? என்பது உட்பட ஜோதிடத்தில் தெரிந்துக்கொள்ளலாம். இது மட்டுமல்லாது முடி கொட்டுவதற்கும், PCOD, குழந்தையின்மை பிரச்சனைக்கும் ஜோதிடத்தில் தீர்வு இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.

இந்தியாவின் நிலைமை

இந்தியாவை பொறுத்தவரை கேன்சர் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது என்பது ஒருபுறம் எனில், மறுபுறம் குழந்தியின்மை பிரச்சனையை வைத்து காசு பார்க்கும் தனியார் மருத்துவமனைகளும் மிகப்பெரிய அளவில் வளர்ந்திருகின்றன. இதிலிருந்து சாமானிய மக்களை எப்படி காப்பாற்றுவது என்கிற புரிதல் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இருக்க வேண்டும். ஆனால், தவெக வேட்பாளர் தேர்வை பார்த்தால் இந்த புரிதல் ஏதும் இல்லாததை போல இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+