பாம்பன் சாமியே சரணம்.. அடிதடி சர்ச்சையில் சிக்கிய து.சபாநாயகர் ரவி சங்கர்! உருகி உருகி பிரார்த்தனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றி கழக அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிவரும் நிலையில் அவசரமாக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி இருக்கிறார் விஜய். இந்த நிலையில் தாக்குதல் சர்ச்சையில் சிக்கிய துணை சபாநாயகர் ரவிசங்கர் விஜய் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக பாம்பன் சுவாமிகள் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். சுவாமி தரிசனம் செய்த பிறகே அவர் கட்சி மீட்டிங்கில் கலந்து கொள்ள சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய் ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதம் கடந்திருக்கிறது. இதற்கிடையே அரசுக்கு புது தலைவலியாக அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் சர்ச்சையில் சிக்கி வரும் விவகாரம் உருவாகியுள்ளது.

Ravi Shankar TVK Deputy Speaker Vijay

ஆட்சி ஆரம்பத்த புதிதில் போதை பொருள் பயன்படுத்தியதாக சரத்குமார், தொண்டரை மிரட்டியதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி என அடுத்தடுத்து பல சர்ச்சையில் சிக்கினார். சமீபத்தில் கூட கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச செய்தி அனுப்பியதாக சர்ச்சை வெடித்தது.

தவெக ரவிசங்கர்

அந்த சர்ச்சை ஓய்வதற்குள் குடிநீர் வசதி கேட்டு மனு கொடுக்க வந்தவரை தாக்கியதாக பஞ்சாயத்தில் சிக்கினார் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் ஆன ரவிசங்கர். கார்த்தி குமார் என்பவர் அவரை சந்திக்க வந்தபோது ரவிசங்கர் அவரை தாக்கியதாக குற்றம் சாட்டினார். முதலில் அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

துணை சபாநாயகர்

தமிழக சட்டசபையை வழிதடத்துச் செல்லும் துணை சபாநாயகர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் மக்களை தாக்குவதா என எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. இதை அடுத்து கார்த்திக் குமாரும் ரவிசங்கரும் இணைந்து ஒரு வீடியோ வெளியிட்டதில் தாக்குதல் நடக்காதது போல் பேசினார். அதற்குப் பிறகு மற்றொரு வீடியோவை வெளியிட்ட கார்த்திக் குமார் தனது குடும்பத்தினரும் தன்னை மிரட்டி சமாதானம் ஏற்பட்டதாக வீடியோவை பதிவு செய்து வெளியிட்டதாக குற்றம் சாட்டினர்.

எம்எல்ஏக்கள் கூட்டம்

இது அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இதற்கிடையே சென்னை பனையூரில் இன்று தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏக்களின் அவசரக் கூட்டம் நடைபெறும் எனவும் இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து எம்எல்ஏக்கள் பனையூர் நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

பாம்பன் சுவாமிகள்

இதற்கிடையே சமீபத்திய சர்ச்சையில் சிக்கிய துணை சபாநாயகர் ரவிசங்கர் சென்னை திருவான்மியூரில் உள்ள புகழ்பெற்ற பாம்பன் சுவாமிகள் திருக்கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்திருக்கிறார். நிச்சயம் தன்னை பற்றி விஜய் தரப்பிடம் இருந்து கேள்விகள் வரும். அதனை சமாளிப்பதற்காகவே ரவிசங்கர் அங்கு பிரார்த்தனை செய்ததாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் காரின் பனையூரில் உள்ள மீட்டிங்குக்கு சென்றார்.

தாமதமான மீட்டிங்

இந்த நிலையில் மற்றொரு சர்ச்சையும் பனையூரில் இருந்து கிளம்பி இருக்கிறது. அவசர பணிகள் காரணமாக சில எம்எல்ஏக்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என சொல்லப்படுகிறது. மேலும் சில எம்எல்ஏக்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டதாகவும் சொல்லப்படும் நிலையில் காலையில் நடப்பதாக இருந்த மீட்டிங் மதியம் ஒரு மணிக்கு மேல் நடக்கும் என்கின்றனர். மேலும் அப்போதும் முழுமையாக நடக்குமா என்பதும் தெரியவில்லை என சொல்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+