காதல்.. கல்யாணம்.. கட்டப் பஞ்சாயத்து! மொய் விருந்து நடத்தும் தவெக மா.செ.! அமைச்சர்கள் பெயரில் வசூல்?
சென்னை: தென் தமிழக அரசியலில் தற்போது ஒரு விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் ஒருவரின் மகன் மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து காவல் நிலையம் வரை சென்றிருக்கிறார். விவகாரம் பெரிதாக ஆளும் கட்சி எனக் கூறி பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்திருக்கிறது. இதை அடுத்து மொய் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறார் அந்த மா.செ. இடையில் அமைச்சர்கள் பெயரைச் சொல்லி சில பல டீலிங்குகளும் நடந்து முடிந்ததாக சொல்கின்றனர் நண்பா நண்பீஸ்.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று இருக்கிறார். ஆரம்பத்தில் விஜய்க்கு இருந்த செல்வாக்கு போக போக சற்று சரிந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். சட்டம் ஒழுங்கு ,பெண்கள் பாதுகாப்பு, போதை பொருள் புழக்கம் என அடுத்தடுத்து அட்டாக்குகளை தொடுத்து வருகின்றன முன்னாள் ஆளும் கட்சியும் அதற்கு முன்னாள் ஆண்ட கட்சியும்..

மேலும் அடிக்கடி அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்கி வருவதும் சிஎம் விஜய்க்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை சரத், ஜெகதீஸ்வரி, கீர்த்தனா, தற்போது கள்ளக்குறிச்சி எம்எல்ஏ என அடுத்தடுத்து ஆட்சிக்கு அவர் பெயரை ஏற்படுத்தி வருவதால் செம டென்ஷனில் இருக்கிறாதாம் 'தலைமை'.
இந்த நிலையில் தான் தென் மாவட்ட அரசியலில் ஒரு விவகாரம் பரபரப்பாக பேசப்படுகிறது. தான் மாவட்ட செயலாளர் எனக் கூறி அந்த விஷயத்தை அப்படியே அமுக்கி விட்டாராம் அந்த மாவட்ட செயலாளர். மல்லிகை மணக்கும் மலைக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் அந்த மாவட்ட செயலாளர்.
ஆரம்பத்திலிருந்து ரசிகர் மன்றத்திலிருந்து பயணித்து வருபவர் அவர். 2026ல் நடந்த தேர்தலில் அவர் கல்லா கட்ட ஆரம்பித்ததால் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை. மேலும் ஒரே ஒரு எம்எல்ஏ மட்டும் தான் அந்த மாவட்டத்தில் வென்றார். இதற்கிடையில் ஆட்சி மாறியதும் கமிஷன் கேட்டு கல்லாகட்டி வந்த அந்த மா.செ.வுக்கு எதிராக எம்எல்ஏ கொந்தளிக்க.. அவருக்கு என ஒரு மாவட்டத்தை பிரித்துக் கொடுத்துவிட்டது தமிழக வெற்றி கழக தலைமை.
இது மட்டுமல்லாமல் காண்ட்ராக்டர்கள், ஹோட்டல் அதிபர்கள், பார் உரிமையாளர்களிடம் நான் தான் மாவட்ட செயலாளர் எனக்கு மாதம் 'கட்டிங்' கொடுக்க வேண்டும் என டார்ச்சர் செய்து வருகிறாராம் அந்த மா.செ. இந்த விவகாரம் தலைமைக்கு பறக்க அவர் மீது ஆக்ஷனுக்கு தயாராகி வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பஞ்சாயத்து நடந்திருக்கிறது.
திடுக் மாவட்டத்தைச் அந்த மாவட்ட செயலாளரின் மகன் மாற்று சாதி பெண்ணை காதலித்து பெண் வீட்டாருக்கு தெரியாமல் அழைத்து வந்து விட்டாராம். பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சத்தம் இல்லாமல் மகளிர் காவல் நிலையத்தில் பஞ்சாயத்து அரங்கேறி இருக்கிறது. பெண் மேஜர் என்பதால் பேசி முடித்துக் கொள்ளலாம் என சொல்ல.. நான் ஆளும் கட்சியின் மாவட்ட செயலாளர் உங்களால் எதுவும் செய்ய முடியாது என பெண்ணின் பெற்றோரை மிரட்டி அனுப்பிவிட்டாராம் அந்த தமிழக வெற்றிக் கழக மா.செ.
மேலும் தலைமைக்கு நெருக்கமாக தான் இருக்கும் நிலையில் எதுவும் செய்து விட முடியாது. போலீஸில் இருந்து ஆட்சி வரை எங்கள் பக்கம் என பெண்ணின் வீட்டாரை மிரட்டி அனுப்பி இருக்கிறார். பெண்ணும் மேஜர் என்பதால் வேறு வழியின்றி எங்களுக்கும் பெண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு பெண்ணின் பெற்றோர் புறப்பட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் தான் மாவட்ட செயலாளர் என்பதால் கல்லா கட்ட வேண்டும் என நினைத்து மகன், பெண்ணின் புகைப்படம் பெயர் கூட போடாமல் மகனுக்கு திருமண திருவிழா என ஊர் முழுவதும் போஸ்டர் அடுத்து மொய் விருந்து கட்ட ஏற்பாடு செய்து வருகிறாராம் அந்த மா.செ.
இது மட்டுமல்லாமல் இதுவரை சண்டை செய்து வந்த சக மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களிடம் பிளக்ஸ், பேனர் வைக்க சொல்லி பேசி இருக்கிறார் அந்த மா.செ. மாவட்டம் முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் சில அமைச்சர்களும் இந்த விழாவில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு இடையே இந்த விவகாரம் தலைமைக்கு தெரிந்த நிலையில் எதற்கு 'சாதி' பஞ்சாயத்து என அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த போவதாக தகவல்கள் உலாவுகின்றன.


Click it and Unblock the Notifications
