ஆரம்பமே அதிரடி.. தவெக தேர்தல் அறிக்கை குழு பயணம் வெளியீடு.. பிப்ரவரி 1 தொடக்கம்
சென்னை: சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் கூறி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்த தவெக தேர்தல் பணிகளில் மற்ற கட்சிகளை விட மந்தமாக உள்ளனர். திமுக, அதிமுக தேர்தல் அறிக்கை குழு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தவெக சார்பில் உருவாக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை குழுவினர் மதுரையில் இருந்து கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்தவுள்ளனர்.
இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தவெக தேர்தல் அறிக்கைக் குழு பொதுமக்களிடையே கருத்துகளைக் கேட்கும் சுற்றுப் பயணத் திட்டம் வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு, மக்களுக்கான அறிக்கை மக்களிடம் இருந்தே உருவாக வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

தவெக தேர்தல் அறிக்கை குழு பயணம்
மேலும் இதற்காகக் கூடுதலான தரவுகளைப் பெறவும் பொதுமக்களின் தேவைகள் குறித்து முழு விவரங்களைச் சேகரிக்கவும் தேர்தல் அறிக்கைக் குழுவானது பின்வரும் வகையில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கும் இந்தப் பயணத்தில் முதலாவதாக தெற்கு மண்டலம் திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மதுரையில் கருத்து கேட்கப்படுகிறது.
கிழக்கு மற்றும் தென் கிழக்கு கடற்கரை மண்டலத்தில் பிப்ரவரி 4 ஆம் தேதி கருத்து கேட்கப்படுகிறது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை (இணைப்பு), ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களுக்கு கடலூரில் கூட்டம் நடத்தப்படுகிறது. மேற்கு மண்டலத்தில் (கொங்கு மண்டலம்) பிப்ரவரி 7 ஆம் தேதி கருத்து கேட்கப்படுகிறது. கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களுக்கு கோவையில் கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது.
மக்கள் கருத்து பெட்டி
மத்திய மண்டலத்தில் (காவிரி டெல்டா & மைய மாவட்டங்கள்) பிப்ரவரி 9 ஆம் தேதி கருத்து கேட்கப்படவுள்ளது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு திருச்சியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படவுள்ளது. வடக்கு மண்டலத்தில் (சென்னை & சுற்றியுள்ள மாவட்டங்கள்), பிப்ரவரி 11 ஆம் தேதி கூட்டம் நடக்கிறது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் கேட்கப்படுகிறது. இந்தக் குழுவினர் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள முக்கியமான அரசு சாரா அமைப்புகள் (NGOs) மற்றும் சமூக ஆர்வலர்களைச் சந்திப்பார்கள். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை நேரடியாக வழங்க 'மக்கள் கருத்துப் பெட்டி' அமைக்கப்படும்.
சமூகவலைதளங்கள் மூலம்
பயணம் செய்ய முடியாத மக்களுக்காகச் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளம் வாயிலாகக் கருத்துகள் பெறப்படும். மேலும் இக்குழுவினர் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள பொதுமக்கள், விவசாயச் சங்கங்களின் உறுப்பினர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பல்வேறு தொழில் அமைப்புகளைச் சார்ந்தோர் உள்ளிட்டோரைச் சந்தித்துக் கருத்துகளைக் கேட்க உள்ளனர்.
இவர்களிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களையும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட இருக்கிறது. மேற்கண்ட குழுவினருக்கு அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு நல்குவதோடு, அந்தந்தப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட அமைப்புகளைச் சந்திக்கும் பொழுது தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தவாக.. கூடுதல் சீட் தராததால் வேல்முருகன் அதிரடி முடிவு! -
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ -
NDA கூட்டணியில் தவெக இணைவதை தடுத்தது ஆதவ் அர்ஜுனா தான் - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பகீர் குற்றச்சாட்டு -
“திமுக தீயசக்தி”! கோஷம் போட்ட சிறுவர்கள்! த.வெ.க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மீது பாய்ந்தது வழக்கு -
“உண்மை வெளியானால் விஜய் ஆட்டம் முடியும்”! ரசிகர்களே வெறுப்பார்கள்.. கொளுத்தி போட்ட மோகன் ஜி -
25 டூ 15.. சர்ரென சரிந்த சப்போர்ட்.. விஜய் கோட்டையில் விரிசல்? தவெக சர்வே சொல்லும் ‘ஷாக்’ ரிப்போர்ட் -
தனி விமானத்தில் மும்பை புறப்பட்டார் விஜய்.. தேர்தல் பணிகளுக்கு இடையே திடீர் பயணம் -
வட தமிழகத்தில் திமுகவுக்கு சிக்கல்? வன்னியர்கள் ஓட்டு மொத்தமா காலி? வேல்முருகன் முடிவால் நெருக்கடி! -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
வேலூர் பெண் போஸ்ட் மாஸ்டருக்கு ஆபாச செய்கை காட்டிய தவெக புள்ளி.. இந்த நபரா? அதிர்ச்சி பின்னணி என்ன -
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
Election Exclusive: பரபர பனையூர்..சைலண்டாய் லிஸ்டை ரெடி செய்த விஜய்! பாதித் தொகுதி வேட்பாளர்கள் ரெடி? யார் யருக்கு சீட்?












Click it and Unblock the Notifications