TVK Manifesto: ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 லட்சம் மருத்துவக் காப்பீடு.. 6 இலவச கேஸ் சிலிண்டர்கள்.. விஜய் வாக்குறுதி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினை தவெக தலைவர் விஜய் இன்று வெளியிட்டார். இதில், மகளிருக்கு மாதம் ரூ.2,500. ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள், மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க பெற்றோருக்கு ஆண்டுக்கு ரூ.15,000 வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் 100 காமராஜர் பள்ளிகள் திறக்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு, வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ 4,000 தரப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை விஜய் அளித்தார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று தவெகவின் முழு தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

தவெகவின் முழு தேர்தல் அறிக்கை:
* "சாத்தியமானதை மட்டுமே தேர்தல் வாக்குறுதியாக தவெக கொடுக்கிறது"
* "60 வயதுக்கு உட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500"
* "ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு தலா 6 சிலிண்டர்கள்"
* "மணப்பெண்ணுக்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டு சேலை"
* தரமான கல்வி வழங்கும் இலவச உறைவிடப் பள்ளிகள்
* ரூ.20 லட்சம் பிணையில்லா கல்விக் கடன் உத்தரவாதம்
* போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு
* குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வரையிலான சுகாதார காப்பீடு திட்டம்
* வேலையில்லா பட்டதாரிக்கு மாதம் ரூ.4,000
* டிப்ளமோ படித்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு ரூ.2500
* 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்
* 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி
* கரும்பு டன்னுக்கு ரூ.4,500 குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும் - விஜய்
* 100 காமராஜர் பள்ளிகள் திறக்கப்படும்
* அனைத்து அரசு சேவைகளையும் ஒரே தளத்தில் வழங்கும் Vetri TN Super App உருவாக்கப்படும்.
* அரசு போக்குவரத்துக் கழக அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்
* அனைத்து நலத்திட்டங்களையும் எளிதாக பெற ஒவ்வொரு குடும்பத்திற்கும் TamilNadu Citizen privilege card திட்டம். இதன் மூலம் அரசின் அனைத்து நலத்திட்ட உதவியும் லஞ்சமில்லாமல் நேரடியாக மக்களை சென்றடையும்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications