பாஜகவுடன் இருக்கும்வரை.. அதிமுகவுடன் எந்த உறவும் கிடையாது.. தவெக நிர்வாகி ராஜ்மோகன் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக மற்றும் திமுக ஆகிய 2 கட்சிகளை தவிர்த்து வேறு எந்த கட்சி எங்களுடன் வந்தாலும், அவர்களுக்காக தமிழக வெற்றிக் கழக கதவுகள் திறந்தே இருக்கும் என்று அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ் மோகன் தெரிவித்துள்ளார். பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக உடன் எந்த உறவும் தங்களுக்கு இல்லை என்று கூறிய அவர், திமுகவை வீழ்த்த மக்களுடன் தான் கூட்டணி என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சியினர் அடுத்தடுத்து பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே அதிமுக - பாஜக உருவாகி இருக்கும் சூழலில், புதிதாக களமிறங்கியுள்ள நடிகர் விஜய்-ன் தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் இணைக்க வேண்டும் என்று இரு கட்சிகளும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

TVK Executive Raj Mohan Announces No Alliance with AIADMK Due to BJP Ties

அதிமுக - பாஜக - தவெக கூட்டணி

அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, அன்புச் சகோதரர் விஜய் திமுகவை வீட்டிற்கு அனுப்ப எங்களுடன் கைகோர்க்க வேண்டும் என்று விருப்பத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதேபோல் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் கருத்துதான் என் கருத்தும். தவெக தலைவர் விஜய் எங்களுடன் இணைய வேண்டும் என்று வரவேற்று இருந்தார்.

எடப்பாடி பழனிசாமி விருப்பம்

அதிமுக - பாஜக - தவெக கூட்டணி அமைந்தால், அது திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கும். இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் விரும்புவதாக பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தவெக உடன் ஏற்கனவே அதிமுகவின் சில நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி அது சாத்தியப்படவில்லை. இருந்தாலும் அதிமுக தரப்பில் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதிமுகவுடன் உறவு இல்லை

அதேபோல் பாஜகவை தங்களின் கொள்கை எதிரி என்று தவெக தலைவர் விஜய் கூறி இருந்தார். இதனால் கொள்கை எதிரியுடன் கூட்டணி அமைப்பாரா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து தவெக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ் மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுகவை வீழ்த்த மக்கள் சக்தியுடன் தான் கூட்டணி வைப்போம். பாசிச சக்தியோடு சேர்ந்திருக்கிற யாருடனும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.

தவெக கதவுகள் திறந்தே இருக்கும்

எங்களுக்கு பாசிசமும் ஒன்றுதான், பாயாசமும் ஒன்றுதான். ஏற்கனவே மக்கள் கொடுத்த கசப்பான முடிவிற்கு பின்னரும் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது. ஆளுங்கட்சியுடன் இருக்கும் திமுகவை வீழ்த்த இதுவரை தனியாகவே நிற்கிறோம். திமுக, பாஜகவை தவிர்த்து யார் வந்தாலும் தவெகவின் கதவுகள் திறந்தே உள்ளது.

புதிய வாக்காளர்கள்

இந்த சட்டமன்றத் தேர்தலில் புதிய வாக்காளர்கள் மட்டும் 1.5 கோடி இருக்கிறார்கள். இதனால் பெருமளவிலான புதிய வாக்காளர்கள் தவெகவை ஆதரிப்பார்கள். 2021 மக்கள் நீதி மய்யம் கட்சியை திமுக எம்பி தயாநிதி மாறன் பாஜகவின் பி டீம் என்று சொனனார். இப்போது அதே பி டீம் கட்சிக்கு திமுக மாநிலங்களவை சீட் ஒதுக்கி இருக்கிறது என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+