இதுதான் ’தவெக’ கொடி.. டேபிளுக்கு போன 3 டிசைன்! டிக் அடித்த தளபதி விஜய்! இந்த கலர் காம்பினேசன் அபாரம்
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்காக 3 கொடிகள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும், எந்தக் கொடியை பயன்படுத்துவது என்பது பற்றி விஜய் தான் முடிவெடுப்பார் என கூறுகின்றனர் தவெகவினர். மேலும் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் வெளியாகும் வரை, தவெக தொடர்பாக எந்த ஒரு புதிய அறிவிப்பும் வராது என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விஜய் ஒரு குறிப்பிட்ட கலர் காம்பினேசனை கட்சிக் கொடியாக தயார் செய்து வைத்துள்ளதாக கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருந்து தற்போது அரசியல் தலைவராக அவதாரம் எடுத்திருக்கிறார் தளபதி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய். தி கோட் படத்திற்கு பிறகு முழு அரசியலில் அவர் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த பல ஆண்டுகளாகவே விஜய் அரசியல் ஆர்வத்தின் தான் இருக்கிறார். அதற்கு அச்சாரமாக தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். தொடர்ந்து அந்த இயக்கத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அவரது அமைப்பு, அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அன்றே கட்சியின் பெயரை அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை தொடங்க உள்ளதாகவும் விரைவில் அதன் கொள்கைகள் அறிவிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
மேலும் முழு அரசியலில் ஈடுபடும் பொருட்டு படங்களில் இனி நடிக்கப் போவதில்லை என தெரிவித்து இருந்தார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டு இடைவெளியே இருக்கும் நிலையில் சினிமாவில் இனி நடிப்பது சிரமம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இதற்கிடையே மாணவர்கள் சந்திப்பு ட்விட்டரில் வாழ்த்து அரசியல் என பிசியாக இருந்த விஜய் தீவிர அரசியலில் ஈடுபட முடிவெடுத்திருக்கிறார். செப்டம்பர் மாதத்தில் அவரது முதல் மாநில மாநாடு நடக்கும் எனக் கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து மண்டலம் மாநாடுகள், தொகுதி வாரியாக மக்களைச் சந்திக்கும் பயணம் உள்ளிட்டவற்றை நடத்த திட்டமிட்டு இருக்கிறார். கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தி இருக்கும் நிலையில் விஜய்யின் முதல் அரசியல் மாநாடு எங்கு நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. திருச்சி, சேலம், ஈரோடு, மதுரை, கோவை உள்ளிட்டவை அந்த பட்டியலில் இருந்தன. ஈரோடு கோவை உள்ளிட்ட பகுதிகளில் மாநாடு நடத்தினால் போதிய அளவில் இடம் இருக்காது என நிர்வாகிகள் கருதினர்.
இதை அடுத்து மதுரை அல்லது திருச்சியில் விஜய் மாநாடு நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு திருச்சியில் நடக்கவிருப்பதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தின் மையம் பகுதியில் இருப்பதாலும், ஏற்கனவே பல அரசியல் கட்சிகளின் முக்கிய மாநாடுகள் நடந்திருப்பதாலும், விஜய் திருச்சியை தேர்ந்தெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சியின் மிகப் பிரபலமான பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் தவெகவின் முதல் மாநில மாநாட்டை நடத்த அனுமதிக்க வேண்டுமென தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர். அதில், செப்டம்பர் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி ஆகியவற்றுக்குள் மாநாடு நடத்த இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சரியான தேதியை குறிப்பிட வேண்டுமென ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விஜய் ஒரு குறிப்பிட்ட கலர் காம்பினேசனை கட்சிக் கொடியாக தயார் செய்து வைத்துள்ளதாக கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்காக 3 கொடிகள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும், எந்தக் கொடியை பயன்படுத்துவது என்பது பற்றி விஜய் தான் முடிவெடுப்பார் என தவெக நிர்வாகிகள் கூறியுள்ளனர். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில்
விஜய் நடித்துள்ள ' தி கோட்' திரைப்படம் வெளியாகும் வரை, தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக எந்த ஒரு புதிய அறிவிப்பும் வராது எனவும், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி தி கோட் படம் வெளியான பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, மாநாடு தேதி என அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கருநீலம், கரும் பச்சை, சிவப்பு காம்பினேஷன் தான் விஜய் கட்சிக் கொடியாக இருக்கலாம், அல்லது மக்கள் இயக்கத்தில் உள்ளது போல், வெள்ளை நீலத்துடன் கூடுதலாக சிகப்பு சேர்க்கப்படலாம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். முதலில் சொன்ன கலர் காம்பினேசன் ஏற்கனவே விஜய் கட்சி பெயரை அறிவித்த போது, லெட்டர் பேடில் கருநீலம், கரும் பச்சை, சிவப்பு காம்பினேஷன் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications