ஜெயலலிதா நினைவு நாளில் செங்கோட்டையன் போட்ட ட்வீட்.. மீண்டும் தவெகவில் சலசலப்பு!
சென்னை: தவெக உயர்மட்ட நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரான செங்கோட்டையன், ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, அவரை போற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக ஜெயலலிதா படத்துடன் பதிவிட்ட கார்த்திகை தீப வாழ்த்துப் பதிவை நீக்கி மீண்டும் பதிவிட்ட செங்கோட்டையன், தற்போது ஜெயலலிதா நினைவு நாளுக்கும் பதிவிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர்.

இந்த நிலையில், த.வெ.க உயர்மட்ட நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்பு செயலாளருமான செங்கோட்டையன், ஜெயலலிதா நினைவு நாளையொட்டி எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
செங்கோட்டையன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து, நாட்டு மக்கள் எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும் என்று தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தவவாழ்வு வாழ்ந்த இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில் அவர்களின் தியாகங்களையும், பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கார்த்திகை தீபத் திருநாள் விழாவையொட்டி, சமீபத்தில் தவெகவில் இணைந்த செங்கோட்டையனும் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், "தீமையில் இருள் நீங்கி உங்கள் வாழ்வில் நன்மையின் ஒளி வீசட்டும், அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகள்" எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் அந்தப் பதிவில் தவெக கொள்கைத் தலைவர்கள் காமராஜர், பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகிய 5 தலைவர்களின் படங்களோடு மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களும் தவெக தலைவர் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் படங்களும் இடம்பெற்றிருந்தன.
செங்கோட்டையன் பதிவிட்ட இந்தப் பதிவில் ஜெயலலிதா படம் இடம்பெற்றிருந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தது. அதிமுகவில் இருந்துவிட்டு தவெகவில் இணைந்த செங்கோட்டையனின் பதிவில் இப்போதும் எப்படி ஜெயலலிதா படம் இருக்கலாம் என விவாதம் நடந்தது.

தவெக ஜெயலலிதாவை ஏற்றுக் கொண்டதா என்று பலரும் கேள்வி எழுப்பினர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்தப் படத்தை செங்கோட்டையன் நீக்கியிருந்தார். ஆனால், எந்த மாற்றமும் செய்யாமல் அதை நேற்று மீண்டும் பதிவிட்டார். இது தவெகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக, தவெகவில் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது செங்கோட்டையன் தனது சட்டைப் பையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருந்தார். அப்போது அதுதொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த செங்கோட்டையன், "இங்கு ஜனநாயகம் இருக்கிறது. யார் புகைப்படம் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்" எனப் பதிலளித்தார். மேலும், தவெக நிர்வாகிகளுடன் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடத்திற்குச் சென்று அவர் மரியாதை செலுத்தி இருந்தார்.
-
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications