Shooting Video-வில் எக்ஸ்பிரஷனே இல்லையே! அதை யார் கேட்டா? மிசாவில் கைதானதற்கான ஆதாரம் எங்கே? தவெக

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஷூட்டிங் வீடியோவைவிட்டு மிசாவில் உங்களை கைது செய்து சிறையில் அடைந்ததற்கான ஆதாரத்தை (detention copy) வெளியிடுங்கள் என தவெக ஐடி விங் விமர்சித்து கருத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட "சிறை சென்ற தியாகி" என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ?

misa mk stalin

எதை உலகறியக் கூடாது என்று மஞ்சள் துண்டு தந்தை முதல் ஆபாச நதி மகன் வரை கட்டி அடைகாத்தார்களோ, அது அம்பலமானதில் அச்சம் அதிகமாகியிருக்கிறது. அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மட்டும் மூச்சுவிடவில்லை.

உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே shooting video வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது.

பல cut-கள், உணர்வற்ற பேச்சு, மீண்டும் உண்மைக்கு மாறான ஒன்றை நம்ப வைக்க முயலும் படுதோல்வி முயற்சியாகவே தெரிகின்றன.

கட்டுமரக் கதைகளாலும் கட்டுக்கதைகளாலும் கட்டமைக்கப்பட்ட பொய்ப் பிம்பம், மெய்யைத் தாக்குப்பிடிக்காது என்பதை நிரூபித்திருக்கிறது இன்று வெளியான பொய் போராளியின் காணொளி. இவ்வாறு அந்த சமூகவலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் போலீஸ், தீயணைப்புத் துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த திங்கள்கிழமை நடந்தது. அப்போது விஜய் ஒரு மணி நேரமாக ஆவேசமாக பேசியிருந்தார்.

மிசா குறித்து பேசும் போது சிறையில் ஸ்டாலினை போலீஸ் அடித்ததில் தாடை உடைந்தது குறித்து செய்கை காட்டினார். இது திமுகவினருக்கு மட்டுமல்ல, தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டணி கட்சியினருக்கே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து தான் யாரையும் கிண்டல் செய்யும் நோக்கி திட்டமிட்டு அந்த உடல்மொழியை செய்யவில்லை என விஜய் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் மிசா காலத்தில் சிறைக்கு சென்ற போது நடந்த கொடுமைகள் குறித்து விவரித்து, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் " என் அன்பான தமிழ் மக்களுக்கு வணக்கம்.. அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் நடந்த சில சர்ச்சைகள், தமிழ் மக்களு்கும் நம் உடன்பிறந்தவர்களுக்கும் கோபத்தையும் அதிருப்தியையும் உண்டாக்கியிருப்பதை நான் உணர்கிறேன்.

அதுவும் இந்த சர்ச்சையில் என்னுடைய சிறை வரலாறும் இருக்கிறதால், அதை பற்றி கொஞ்சம் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தம்பி விஜய் நீங்க சொல்றது உண்மை தான். பொய் எல்லாம் அல்ல.. எமெர்ஜென்சில் காலத்தில் அதை எதிர்த்து கருணாநிதி மெரினா கடற்கரையில் மிகப்பெரிய கூட்டத்தை கூட்டி மிசா சட்டத்தை கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து அப்போது இருந்த ஒன்றிய அரசு 30.01.1976 ஆம் ஆண்டு திமுக ஆட்சியை கலைத்தார்கள்.

ஆட்சியை கலைத்த அடுத்த நொடி மிசா சட்டத்தில் என்னை கைது செய்வதற்காக கோபாலபுரம் வீட்டிற்கு போலீஸார் சென்றனர். அன்னைக்கு நான் வீட்டில் இல்லை. "பையன் பிரசாரத்திற்கு போய் இருக்கான். நாளை வந்துவிடுவான். வந்ததும் நானே போன் பண்ட்ரேன்.. வந்து அரெஸ்ட் பண்ணிக்கோங்க" என கருணாநிதி போலீஸிடம் சொன்னார். அடுத்த நாள் போலீசிடம் என்ன கைது செய்ய சொல்லிவிட்டார்.

சிறையில் எனக்கு பல கொடுமைகள் நடந்துச்சு.. என்னை கொண்டு போய் அடைத்ததே தொழு நோயாளிகள் இருக்கும் இடத்தில் தான். 10 பேரை ஒரு சின்ன அறைக்குள் அடைத்து வைத்தார். அந்த அறைக்குள் ஒரு பானை தான் இருக்கும். அதில் தான் அனைவரும் சிறுநீர் கழிக்க வேண்டும்.

ரொம்ப துர்நாற்றமாக இருக்கும். இந்த அறையில்தான் நாங்கள் தூங்க வேண்டும். நைட்டில் தூங்க விடாமல் போலீஸ் லத்தியால் அடிப்பாங்க.. பூட்ஸ் காலால் மிதிப்பாங்க.. இன்னொரு பக்கம் ஆயுள் தண்டனை கைதியை வைத்து கொடூரமாக அடிப்பாங்க.

அவங்க அடித்ததில் என் அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டி பாபு ஜெயிலிலேயே இறந்து போனார். அவங்க அடிச்சதில் என்னுடைய தாடை எலும்பு உடைந்தது. நீங்கள் கூட இப்படி கை வைத்து தாடையை காண்பித்தீர்கள் அல்லவா? அது சரிதான்." இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+