விஜய் கட்சியில் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்களா? ஓப்பனாக பேசிய தவெக அருண்ராஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்றும், நாளுக்கு நாள் தவெகவிற்கு மக்களின் ஆதரவு அதிகமாகிக் கொண்டே போகின்றது. மக்கள் விஜய் பக்கம்தான் இருக்கிறார்கள் என்று தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் கூறியுள்ளார். மேலும் தவெகவில் ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாக கூறப்பட்ட விமர்சனத்துக்கும் பதில் அளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

tvk-faces-allegations-of-sleeper-cells-policy-propagation-secretary-arunraj-responds

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

திமுக சமூக நீதி கட்சி என்று சொல்வார்கள்.. ஆனால் அது அவர்களுக்கு மிகப்பெரிய வார்த்தை.. குறைந்தபட்சம் அடிப்படை நீதி கூட இல்லை. அடிப்படி நீதிக்கு கூட பாதுகாப்பு இல்லாத வகையில் தான் திமுக ஆட்சி நடக்கிறது. உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை சொல்லலாம்.

திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் சென்ற இடம் அருகேயே, காவலர் குடியிருப்பில் வைத்தே இளைஞர் வெட்டி கொலை செய்யப்படுகிறார். ராஜபாளையத்தில் கோவிலில் வைத்தே வெட்டி கொலை செய்து இருக்கிறார்கள். இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி இருக்கும் சூழலில் மக்கள் வெளியே வருவதற்கே பயப்படுகிறார்கள். மக்களால் பாதுகாப்பாக எங்கும் செல்ல முடியாத சூழல் உள்ளது.

திமுக மீது கடும் அதிருப்தி

பெற்றோர்கள் பெண்களை வீட்டில் இருந்து வெளியே அனுப்புவதற்கே பயப்படுகின்றனர். ஒரு வித அச்சத்தில் இருக்கிறார்கள். இதனை எல்லாம் பாக்காமல், வெறும் சினிமா டயலாக் பேசிவிட்டு அரங்கத்தை கைதட்டு வாங்குவதனால் எந்த பயனும் இல்லை. ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. மக்கள் திமுக மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று திமுகவிற்கே தெரிகிறது.

இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் ஆதரவு அதிகம் ஆகிக்கொண்டே இருக்கிறது. இதனை எல்லாம் பார்த்து நிலைதடுமாறி இப்படியெல்லாம் பேசிவருகிறார்கள் என்று கூறினார்.

காங்கிரசுடன் கூட்டணி பேச்சுவார்த்தை

தொடர்ந்து காங்கிரசுடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக கூறப்படும் கருத்துக்கு பதில் அளித்து அருண்ராஜ் பேசியதாவது:- கூட்டணி குறித்த நிலைப்பாட்டை எங்கள் முதல் மாநாட்டிலேயே சொல்லிவிட்டோம். இப்போது வரை அதில் எந்த மாற்றமும் இல்லை. கூட்டணி பற்றி முடிவு எடுப்பது தலைவர் விஜய் தான். அவருக்கு கூட்டணி குறித்து முடிவு எடுக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தவெகவில் ஸ்லீப்பர் செல்களா?

எங்கள் தலைமையை ஏற்று கூட்டணிக்கு வருபவர்களை நிச்சயமாக நாங்கள் வரவேற்போம். திமுக மற்றும் பாஜகவை தவிர.. விஜய் விரைவில் மக்களை சந்திப்பார். விஜய்யின் மக்கள் சுற்றுப்பயணம் விரைவில் மீண்டும் தொடங்கும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

தவெகவில் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்களா என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அருண்ராஜ், தவெகவில் ஸ்லீப்பர் செல்கள் எல்லாம் இல்லை. இது ஒரு கற்பனை..கரூர் சம்பவத்திற்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தையே முடக்கிவிடலாம் என்று நினைத்தார்கள்.. அது முடியவில்லை. மக்கள் விஜய் பக்கம்தான் இருக்கிறார்கள். திமுக நினைத்தது நிறைவேறாததால், முதல்வரும், துணை முதல்வரும் நிலை தடுமாறி ஏதேதோ எங்களை பற்றி பேசி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+