“கூட்டத்துல கண்டம்”.. கட்சிக்கும், தவெக அரசுக்கும் இதுதான் சிக்கலே..! மதுரையில் கொந்தளித்த மக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக கட்சிக்கே கூட்டத்தை ஹேண்டில் செய்வதில் செய்வதில் தான் பிரச்சனையாக இருக்கிறது. கரூர் துயரச் சம்பவம் ஒரு கரும்புள்ளியாக பதிவான நிலையில், தவெக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு நிகழ்விலும் கூட்டத்தைக் கையாள்வதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. தவெக கட்சியினரால் கூட்டத்தை மேனேஜ் செய்ய முடியவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. அது அக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகும் தொடர்கிறது.

tvk

விஜய்யின் முதல் மாநாட்டில்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடத்தினார். மாநாடு நடந்த அன்று காலையில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகை தந்தனர். வி.சாலை முழுவதும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்தது. மாலை 4 மணிக்கு மேல் தான் விஜய் மேடைக்கு வருகை தந்தார்.

காலை முதலே லட்சக்கணக்கானோர் மாநாட்டு திடலில் குவிந்ததால் ஏராளமானோர் குடிநீர் இல்லாமல், வெப்பம் தாங்காமல் 100க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். மயக்கம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கப்பட்டது. சார்லஸ் என்பவர் மயக்கமடைந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விஜய் மாநாட்டிற்காக சென்னையில் இருந்து பைக்கில் புறப்பட்ட இளைஞர்கள் சாலை விபத்தில் பலியாகினர். அதேபோல, திருச்சி மாவட்டத்தில் இருந்து மாநாட்டுக்கு காரில் சென்ற தவெக நிர்வாகிகளும் விபத்தில் சிக்கி பலியாகினர். விக்கிரவாண்டி மாநாட்டுக்கு வந்தவர்களில் 6 பேர் விபத்துகளில் பலியாகினர்.

மதுரை மாநாட்டில்

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடந்தது. இந்த மாநாட்டின்போது கூட்ட நெரிசலில் சிக்கி நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் ரோஷன் உயிரிழந்தார். மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட ரோஷனை அவரது நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய அரியலூரை சேர்ந்த இளைஞர் ஜெயசூர்யா, சாலை விபத்தில் சிக்கினார். திருச்சி அருகே நடந்த விபத்தில் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயசூர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கரூர் துயரச் சம்பவம்

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த கோர சம்பவத்தைத் தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார் விஜய்.

கடந்த பிப்ரவரி மாதம், கடும் நிபந்தனைகளோடு சேலத்தில் நடந்த தவெக தலைவர் விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திலும் ஒருவர் பலியானார். தவெக தலைவர் விஜய் நடத்திய முதல் மாநாடு தொடங்கி, நிர்வாகிகள் சந்திப்பு கூட்டங்கள் வரை உயிர் பலிகள் தொடர்ந்து வந்தன

கூட்டத்துல கண்டம்

இந்நிலையில், தற்போது தவெக ஆட்சிக்கு வந்துள்ள நிலையிலும், கூட்டத்தை கையாள்வதில் திணறி வருவதாக தெரிகிறது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சரிவர செய்யவில்லை என பக்தர்கள் கொந்தளித்துள்ளனர்.

மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கை கோயிலின் மேல் தளத்தில் இருந்து பார்க்க, விஐபிக்கள், நன்கொடையாளர்கள், நீதிபதிகள், அதிகாரிகள் என 9 ஆயிரம் பேருக்கும், பொதுமக்களுக்கான அனுமதி என்ற பெயரில் ஆன்லைனில் பதிவு செய்தவர்களில் குலுக்கல் முறையில் தேர்வான சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் பாஸ் வழங்கி அனுமதிக்கப்பட்டனர். 4 சித்திரை வீதிகளிலும் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கவில்லை.

தீர்த்தம் கூட தெளிக்கல

குடமுழுக்கைக் காண நேற்று நள்ளிரவு முதல் கோயிலை சுற்றிலும் திரண்ட பக்தர்களை சித்திரை வீதிகளில் அனுமதிக்கவில்லை. மேலும், கும்பாபிஷேகம் முடிந்து பக்தர்களுக்கு தீர்த்தமும் தெளிக்கவில்லை. இதனால், பக்தர்கள் கடும் கோபமடைந்தனர். தீர்த்தம் கூட தெளிக்க ஏற்பாடு செய்யாமல் என்ன அரசு இது எனக் கேள்வி எழுப்பினர்.

கட்சி கூட்டங்கள் நடத்தும்போதுதான் கூட்டத்தை கையாள்வதில் தவெக மூச்சுத்திணறியது என்றால், தற்போது ஆட்சிக்கு வந்தபிறகும், கூட்டங்களை கையாள்வதில் சவால்களை எதிர்கொண்டு வருகிறது தவெக. மீனாட்சி அம்மன் கோவிலில் தவெக அரசின் ஏற்பாட்டுக் குறைபாடுகள் மக்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+