"2026ல் உங்கள் குடும்ப ஆட்சியை விஜய் அகற்றுவார்.." முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு தவெக பதிலடி
சென்னை: கொளத்தூரில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இன்று புதிது புதிதாகக் கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என நினைப்பதாகக் கூறியிருந்தார். தவெக தலைவர் விஜய்யை தான் முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக விமர்சிப்பதாகக் கூறப்பட்ட நிலையில், இதற்கு அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், இக்கட்சியின் முதல் மாநாடு கடந்த அக். 27ம் தேதி விழுப்புரத்தில் நடந்தது.

விஜய்: இந்த மாநாட்டில் விஜய் பேசும் போது திமுக குறித்து கடும் விமர்சனங்களைக் கூறியிருந்தார். தங்கள் கட்சியின் சித்தாந்த எதிரி பாஜக என்றும் அரசியல் எதிரி திமுக என்பது போல விஜய் பேசியிருந்தார். மக்கள் விரோத ஆட்சியைத் திராவிட மாடல் ஆட்சி எனக் கூறி ஏமாற்றுகின்றனர்.. எங்கள் கட்சி வண்ணம் தவிர வேறு கலரை எங்கள் மீது பூச முடியாது.. திராவிட மாடல் என்ற பெயரில் தமிழ்நாட்டைச் சுரண்டும் குடும்ப சுயநல அரசியல்வாதிகள் என்று கடுமையாகவே விமர்சித்து இருந்தார்.
இதற்கு திமுகவினர் பலரும் பதிலடி கொடுத்தனர். அதேநேரம் டாப் தலைவர்கள் யாரும் நேரடியாக இதில் பதில் தரவில்லை. இந்தச் சூழலில், இன்று சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக விஜய்யை சாடும் வகையில் பேசியிருந்தார்.
முதல்வர் ஸ்டாலின்: அவர் அங்குப் பேசுகையில், "திமுக அரசு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இது சிலருக்குப் பிடிக்கவில்லை. இன்று வருபவன் எல்லாம், புதிது புதிதாகக் கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழியவேண்டும் என்று பேசி வருகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் தேவையில்லாமல் பதில் சொல்ல வேண்டிய தேவையும் அவசியமும் எங்களுக்கு இல்லை. பதில் சொல்லி நேரத்தை வீணடிக்கவும் விரும்பவில்லை. அண்ணா பாணியில் சொல்கிறேன்.. வாழ்க வசவாளர்கள்.
இவர்கள் பேசுவதைக் கேட்டு நான் கவலைப்படவில்லை. மக்களுக்குச் சேவை எங்களுக்கு நேரம் போதவில்லை. பொதுமக்கள் எந்த நம்பிக்கையில் இந்த ஆட்சியை எங்களிடம் ஒப்படைத்தார்களோ அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவோம்" எனப் பேசியிருந்தார். விஜய்யை தான் முதல்வர் ஸ்டாலின் இதுபோல விமர்சிப்பதாகப் பலரும் கூறி வந்தனர். இந்தச் சூழலில் முதல்வரின் பேச்சுக்குத் தமிழக வெற்றிக் கழகம் பதிலடி கொடுத்துள்ளது.

பதிலடி: இது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வீர விக்னேஷ்வரன் கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள அனைவருமே விஜய்யை தங்கள் சகோதரனாக மகனாக குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கிறார். அந்தளவுக்கு நெருங்கிய உறவையும் அதீத அன்பை வைத்துள்ளனர். அப்படியிருக்கும் போது முதல்வர் ஸ்டாலின் எங்கள் தலைவரைத் தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்து இருக்கிறார். இது துரதிஷ்டவசமானது. அரசியல் எதிரிகளுக்கு இதுபோல பதில் கொடுப்பது சரியான போக்கு இல்லை.
தமிழ்நாட்டில் தங்கள் குடும்ப ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அரசியல் எதிரிகளைத் தரக்குறைவாகப் பேசுவது திமுகவின் டிஎனஏவிலேயே இருக்கிறது. முதல்வரின் பேச்சும் அதைத்தான் காட்டுகிறது. 1970களில் ஆண்டு இந்த குடும்ப ஆட்சிக்கு எதிராகவே எம்ஜிஆர் கலகம் செய்தார். இந்த குடும்ப ஆட்சியை அகற்றியும் காட்டினார். வரும் 2026ல் இந்த வரலாறு மீண்டும் திரும்பும். 2026ல் இந்த குடும்ப ஆட்சியைத் துடைத்தெறிந்துவிட்டு, எங்கள் ஒரு ஜனநாயக ஆட்சியை அமைப்பார்" என்றார்.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
போன முறை.. உலக நாடுகளே வியக்கும் வகையில் உதயநிதி நடத்தினாரே! உலக செஸ் சாம்பியன்ஷிப்.. கைவிட்ட தவெக? -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
விஜய் வெற்றி.. மக்கள் முடிவை தவறுன்னு சொல்ல நீங்க யார்? சிவக்குமார் சொன்னதும் சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் -
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடமே லஞ்சம்.. அர்ச்சகர் பூஜை செய்ய தடை.. 2 காவலாளிகள் சஸ்பெண்ட்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில்












Click it and Unblock the Notifications