வேளாண் வரவு செலவுத் திட்டம் இன்று தாக்கல்.. விவசாயிகள் பயிர்க்கடன் பட்ஜெட்டில் ரத்தாக வாய்ப்பா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வனோத் தாக்கல் செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். நேற்றைய பொது பட்ஜெட்டில் ஏற்பட்ட ஏமாற்றங்களை ஈடுசெய்யும் வகையில், இன்றைய வேளாண் பட்ஜெட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அதிரடி சலுகைகளை அறிவிக்குமா என்று தமிழக விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்..

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பொது பட்ஜெட் (2026-27) நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

TVK Budget 2026 Agriculture Budget 2026 Vijay Government Magalir Urimai Thogai 2026 2026

நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த இந்த வரவு செலவுத் திட்டத்தில், "அண்ணன் சீர்", "வெற்றி மடிக்கணினி" மற்றும் மாணவர்களுக்கான நவீன மிதிவண்டிகள் வழங்கும் புதிய திட்டங்கள் போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற்று மக்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றன.

அமைச்சர வினோத்

இருந்தாலும் தேர்தல் களத்தில் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம், ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், வேலையில்லாத இளைஞர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை திட்டம் மற்றும் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசப் பயணம் உள்ளிட்ட பிரதான வாக்குறுதிகள் நேற்றைய பட்ஜெட்டில் இடம்பெறாதது பொதுமக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், தமிழக சட்டப்பேரவையின் ஒட்டுமொத்த கவனமும் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண்மைத் துறைக்கான தனி பட்ஜெட் பக்கம் திரும்பியுள்ளது.

இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று வேளாண் துறைக்கெனத் தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தது. இதில் வேளாண்மைத் துறை மட்டுமின்றி, கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன்வளம், கூட்டுறவு, எரிசக்தி என விவசாயிகளோடு நேரடியாகத் தொடர்புடைய அனைத்துத் துறைகளின் முக்கிய அறிவிப்புகளும் ஒருசேர வெளியிடப்பட்டு வந்தன.

அந்த நடைமுறையை தவெக அரசும் இப்போது தொடர்ந்து முன்னெடுக்கிறது.. அதனால்தான் புதிய வேளாண் பட்ஜெட்டை தயாரிப்பதற்காக மாநிலம் முழுவதிலும் உள்ள விவசாயிகளிடம் நேரடியாக கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, அவர்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் விரிவாக பெறப்பட்டன. இதையடுத்து, இன்று காலை 9.30 மணிக்கு, வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தனது முதல் வேளாண் வரவு செலவுத் திட்டத்தைச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளார்.

விவசாயிகளின் எதிர்பார்ப்பு

ஒரு மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கும் முதன்மையான அடித்தளமாக விளங்குவது வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களே ஆகும்... வருடந்தோறும் பட்ஜெட்டில் வேளாண் துறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும், தங்களின் அடிப்படைப் பிரச்சினைகளும் வாழ்வாதார சிக்கல்களும் தீரவேயில்லை என்பதே விவசாயிகளின் ஆதங்கமாக இருந்து வருகிறது.

எனவே, இன்று தாக்கல் செய்யப்படவுள்ள இந்த சிறப்பு வேளாண் பட்ஜெட்டில் சாகுபடியை மீண்டும் ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாய பயிர்க்கடன்கள்

முக்கியமாக, ,விவசாயப் பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுமா? மற்றும் பயிர் விதைப்புக் கால நிதி உதவியாக ரூ.15,000 அறிவிக்கப்படுமா? போன்ற மிக முக்கிய கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் விவசாயிகளிடம் நிலவி வருகின்றன..

நேற்றைய பொது பட்ஜெட்டில் ஏற்பட்ட ஏமாற்றங்களை ஈடுசெய்யும் வகையில், இன்றைய வேளாண் பட்ஜெட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அதிரடி சலுகைகளை அறிவிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+